IPL 2023: க்ருணல் பாண்டியா, அமித் மிஷ்ராவின் சுழலில் சுருண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..! லக்னோவிற்கு எளிய இலக்கு

By karthikeyan V  |  First Published Apr 7, 2023, 9:26 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்து, 122 ரன்கள் என்ற எளிய இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 


ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன. சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் இணைந்துள்ளதால், இந்த போட்டியில் அவர் கேப்டன்சி செய்கிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

Tap to resize

Latest Videos

மயன்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமாத், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷீத். 

சூர்யகுமார் யாதவால் என்ன செய்ய முடியும்னு உலகத்துக்கே தெரியும்! ODI WC அணியில் கண்டிப்பா எடுக்கணும் - பாண்டிங்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி: 

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெஃபெர்டு, க்ருணல் பாண்டியா, அமித் மிஷ்ரா, யஷ் தாகூர், ஜெய்தேவ் உனாத்கத், ரவி பிஷ்னோய்.

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர். மயன்க் அகர்வால் 8 ரன்னில் க்ருணல் பாண்டியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அன்மோல்ப்ரீத் சிங்கையும் (31), ஐடன் மார்க்ரமையும்(0) க்ருணல் பாண்டியா வீழ்த்தினார். நிலைத்து நின்று நிதானமாக ஆடிய ராகுல் திரிபாதியை 35 ரன்களூக்கு யஷ் தாகூர் வீழ்த்தினார்.

IPL 2023: அந்த ஒரு பந்தை வீச தெரியலைனா பவுலர்ஸ் வேஸ்ட்..! சிஎஸ்கே பவுலர்களுக்கு லெஜண்ட் பிராவோவின் அறிவுரை

அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தர்(16) மற்றும் அடில் ரஷீத்(4) ஆகிய இருவரையும் அமித் மிஷ்ரா வீழ்த்தினார். அப்துல் சமாத் அதிரடியாக ஆடி 10 பந்தில் 21 ரன்கள் அடித்து முடிக்க, 20 ஓவரில் 121 ரன்கள் அடித்த சன்ரைசர்ஸ் அணி, 122 ரன்கள் என்ற எளிய இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 - -

click me!