SA20: 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வெற்றி: புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடம்!

By Rsiva kumar  |  First Published Jan 20, 2023, 12:50 PM IST

பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான எஸ்ஏ டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 


SA20 எனப்படும் டி20 தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில், மொத்தமாக 6 மணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த 14ஆவது போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணியில் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். லுப்பே மட்டும் அதிகபட்சமாக 28 ரன்கள் சேர்த்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சு தரப்பில், சன்ரைசர்ஸ் அணியில் கேர்ஸ், மெர்வே, மார்க்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மகாலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இவ்வளவு அதிக ஸ்கோர் கொண்ட ஒரு போட்டியை ஹைதராபாத் பார்த்ததில்லை: முகமது அசாருதீன்!

Latest Videos

undefined

இதையடுத்து 128 ரன்கள் என்ற எளிய இலக்கை வெற்றி இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி களமிறங்கியது. இதில், தொடக்க வீரர்கள் ரோசிங்டன் 20 ரன்னிலும், ஹெர்மான் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் ஓரளவு ரன் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. 5 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டியில் தோல்வியை கண்டுள்ளது.

சுப்மன் கில் சாதனை: கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்!

பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டும் வெற்றி பெற்று 3ல் தோல்வியை தழுவியுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

குட்லக் டீம் இந்தியா: ராய்பூரில் உற்சாக வரவேற்பு: வீரர்களைக் கண்டு துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

click me!