ஹைதராபாத் இது போன்ற ஒரு அதிக ரன்கள் கொண்ட ஒரு போட்டியை பார்த்ததே இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதின் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக ஆடி ஹாட்ரிக் சிக்சர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்து விராட் கோலி, ஹர்திக் பாண்டியா சாதனையை முறியடித்தார். அவர், 149 பந்துகளில் 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் உள்பட 208 ரன்கள் எடுத்தார். அதுமட்டுமின்றி 2 ரன்களில் இஷான் கிஷானின் சாதனையையும் முறியடிக்க கோட்டைவிட்டார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி 2ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!
ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்றாவது நடுவர் தவறான அவுட் கொடுக்க அவர் 28 ரன்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 31 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் இருவரும் ஜோடி சேர்த்து இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். காட்டு காட்டுன்னு காட்டிய பிரேஸ்வேல் 10 சிக்சர்கள், 12 பவுண்டர்கள் அடித்த நிலையில், 78 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து கடைசி கட்டத்தில் அவுட்டானார். இதன் மூலமாக நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சுப்மன் கில் சாதனை: கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்!
இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இவ்வளவு அதிக ஸ்கோர் கொண்ட ஒரு போட்டியை ஹைதராபாத் இதற்கு முன்னதாக கண்டதில்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
குட்லக் டீம் இந்தியா: ராய்பூரில் உற்சாக வரவேற்பு: வீரர்களைக் கண்டு துள்ளிக் குதித்த ரசிகர்கள்!
இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை ராய்ப்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ராய்ப்பூர் வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
IPL 2023: இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி.. வைரல் வீடியோ
Hyderabad had never seen such a high scoring game. Congratulations team India 🇮🇳 on the win. pic.twitter.com/BbjoVMcYlu
— Mohammed Azharuddin (@azharflicks)