SA20 Final: 5 விக்கெட் கைப்பற்றிய மார்கோ யான்சன் – 2ஆவது முறையாக சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!

By Rsiva kumarFirst Published Feb 11, 2024, 10:14 AM IST
Highlights

எஸ்ஏ20 தொடரின் இறுதிப் போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது சாம்பியனானது. இதையடுத்து 2ஆவது சீசன் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி நேற்று வரை நடந்தது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், எம்.ஐ.கேப்டவுன், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ், பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் என்று மொத்தமாக 6 அணிகள் இடம் பெற்று விளையாடின.

தமிழ் தலைவாஸ் அணிக்கு கிடைத்த கடைசி சான்ஸ் – பிளே ஆஃப் சுற்றா? எலிமினேஷனா?

இதில், பிரிட்டோரியா கேபிடல்ஸ் மற்றும் எம்.ஐ.கேப் டவுன் ஆகிய 2 அணிகள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், மற்ற 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த 4 அணிகளில் சன்ரைசர்ஸ் கேப் டவுன் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

 

2 titles in 2 tournaments for Sunrisers in . Thalaivar will now have nice things to to Kala sir and Kavya in the audio launch of his next movie produced by Sun Pictures! 😂 pic.twitter.com/ptUpj2GFUt

— Srini Mama (@SriniMaama16)

 

Decided to watch Sunrisers Easter Cape match today.......Watching the fans I suddenly remembered this gem from season 1

Kavya Maran bc😭😭😭 l l
pic.twitter.com/uxmpDTNffi

— Shiran (@ShiranSkywalker)

 

Watch closely how Kaviya Mam asks Markram to come to the front and end and then they both celebrate the triumph and have a snap.

It's a statement " Capt of Sunrisers- Aiden Markram " pic.twitter.com/QrCAqFAzoZ

— Sunrisers Army (@srhorangearmy)

 

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் முதலில் பேடிங் செய்தது. அதன் படி ஜோர்டன் ஹெர்மன் 42 ரன்களும், அபெல் 55 ரன்களும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 42 ரன்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 56 ரன்களும் எடுத்துக் கொடுக்க சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது.

ஆகாஷ் தீப் யார்? இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

இதையடுத்து கடின இலக்கை துரத்திய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் முன்வரிசை வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அனுபவ வீரரான குயிண்டன் டி காக் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக வியான் முல்டர் 38 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். 2ஆவது அதிகபட்சமாக டுவைன் பிரிட்டோரியஸ் 28 ரன்கள் சேர்த்தார்.

மற்ற வீரர்கள் ஒற்றைப்பட இலக்க ரன்களில் ஆட்டமிழக்க டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அபாரமாக பந்து வீசிய மார்கோ யான்சன் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சன்ரைசர்ஸ் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலமாக காவ்யா மாறனின் அணியானது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 2ஆவது முறையாக சாம்பியனானது. இதையடுத்து காவ்யா மாறன் தனது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் ஆரவாரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Lucknow Super Giants, Shamar Joseph: ஷமார் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு தட்டி தூக்கிய லக்னோ!

 

Happiest person - Kavya Maran | pic.twitter.com/rrPfSe5h3f

— Don Cricket 🏏 (@doncricket_)

 

click me!