ஐபிஎல்லில் ஆடும்போது ரெஸ்ட் தேவைப்படல.. இந்தியாவுக்காக ஆடுறதுனா மட்டும் வலிக்குது! சீனியர்களை விளாசிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Jul 12, 2022, 4:26 PM IST
Highlights

சீனியர் வீரர்கள் ஐபிஎல் முழுக்க ஆடிவிட்டு, இந்தியாவிற்காக ஆடும்போது ஓய்வு கேட்பதை சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
 

இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு, சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அவ்வப்போது ஓய்வு வழங்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி,  பும்ரா, ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால், ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.

இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது சீனியர் வீரர்கள் ஓய்வு எடுப்பதை கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். ஐபிஎல்லில் ஆடமுடிந்த அவர்களுக்கு, நாட்டுக்காக ஆடும்போது மட்டும் ஓய்வு தேவைப்படுகிறதா என்று கடுமையாக விளாசியுள்ளார்.

இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், சர்வதேச போட்டிகளில் வீரர்களுக்கு ஓய்வு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐபிஎல்லில் ஆடும்போது ஓய்வு எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இந்தியாவிற்காக ஆடும்போது ஓய்வு கேட்கிறார்கள். இதை ஏற்கமுடியாது. நீங்கள் நாட்டுக்காக ஆடுகிறீர்கள்.ஓய்வை பற்றி பேசவே கூடாது. டி20 கிரிக்கெட்டில் 20 ஓவர்கள் தான் விளையாடுகிறீர்கள். டெஸ்ட் போட்டியில் ஆடினால் கூட உடலும் மனமும் சோர்வடையும். அதனால் ஓய்வு கேட்கலாம். டி20 போட்டிகளில் ஆடுவதற்கென்ன.?

இதையும் படிங்க - கங்குலி, சேவாக், யுவராஜையே உட்கார வச்சுருக்காங்க.. கோலி மட்டும் ஸ்பெஷலா..?

இந்த ஓய்வு விவகாரத்தில்  பிசிசிஐ கவனம் செலுத்த வேண்டும். ஏ+ பிரிவு வீரர்களுக்கு ஊதியம் கோடிகளில் கொட்டி கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் நல்ல ஊதியம் கிடைக்கிறது. நிறுவங்களின் சி.இ.ஓவாக இருப்பவர்களுக்கு இதுமாதிரி ஓய்வு கிடைக்குமா? இந்திய கிரிக்கெட் இன்னும் தொழில்முறையானதாக மாறவேண்டுமென்றால் ஒரு கோடு கிழிக்க வேண்டும். ஓய்வு தேவை என்றால் ஊதியம் குறைக்கப்படும் என்று சொல்ல வேண்டும். ஐபிஎல்லில் ஆடிவிட்டு நாட்டுக்காக ஆடும்போது ஓய்வு கேட்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!