கோலி ஃபார்மில் தான் இருக்கார்.. ஆனால் லக் இல்ல..! ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் வீரர்

Published : Jul 11, 2022, 10:16 PM IST
கோலி ஃபார்மில் தான் இருக்கார்.. ஆனால் லக் இல்ல..! ஆதரவாக குரல் கொடுத்த முன்னாள் வீரர்

சுருக்கம்

ஃபார்மில் இல்லாத விராட் கோலியை அனைத்து முன்னாள் வீரர்களும் விமர்சித்துவரும் நிலையில், முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா மட்டும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.  

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும், சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 
 
சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என எந்தவிதமான போட்டிகளிலும் சரியாக ஆடுவதில்லை கோலி. டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க திறமையான இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அருமையாக ஆடி ஸ்கோர் செய்துவருகின்றனர். 

இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்

அதேவேளையில், கோலி தொடர்ந்து சொதப்பிவருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் சொதப்பியதுடன், டி20 போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பினார். முதல் டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், 2வது போட்டியில் ஒரு ரன்னும், 3வது போட்டியில் 11 ரன்னும் மட்டுமே அடித்தார்.
 
ஃபார்மில் இல்லாமல் சொதப்பிவரும் விராட் கோலியை, அவரது பழைய பெர்ஃபாமன்ஸ் மற்றும் கோலி என்ற பிராண்டுக்காக அவரை அணியில் ஆடவைக்கக்கூடாது என்று கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறியிருந்தனர். 

இதையும் படிங்க-  ENG vs IND: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! ஒருநாள் அணியில் இவர் இல்லாமலா..?

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கு பின் பேசியபோது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கோலிக்கு ஆதரவாக பேசியிருந்தார். 

இப்போது முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தாவும் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். கோலி குறித்து பேசிய தீப்தாஸ் குப்தா, இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் கோலி ஃப்ளிக் ஷாட், ஸ்டிரைட் டிரைவ் ஆகிய ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடினார். அவர் பேட்டிங் ஆடும்போதெல்லாம் நன்றாகத்தான் ஆடுகிறார். அவர் அவுட் ஆஃப் ஃபார்மில் எல்லாம் இல்லை. நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். தவறான ஷாட்டுகள் எல்லாம் ஆடுவதும் இல்லை. எனக்கு தெரிந்து, அவருக்கு லக் இல்லை என்று தீப்தாஸ் குப்தா கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!
SMAT 2025: ஜெய்ஸ்வால் மின்னல் வேக சதம்.. சர்பராஸ் கான் அதிரடி அரை சதம்.. கம்பீருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்!