
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய மதுரை அணி, அந்த அணியின் நட்சத்திர வீரர் அருண் கார்த்திக் பெரிய ஸ்கோர் அடிக்காமலேயே மதுரை அணி 20 ஓவரில் 165 ரன்கள் அடித்தது.
இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்
மதுரை அணியின் தொடக்க வீரர் அருண் கார்த்திக் 13 பந்தில் 13 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கே ராஜ்குமார் 26 பந்தில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்னேஷ் ஐயர் 16 ரன்களுக்கு நடையை கட்டினார்.
இதையும் படிங்க - ENG vs IND: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! ஒருநாள் அணியில் இவர் இல்லாமலா..?
கேப்டன் சதுர்வேத் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடினர். சதுர்வேத் 24 பந்தில் 34 ரன்களும், ஈஸ்வரன் 27 பந்தில் 41 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 165 ரன்கள் அடித்துள்ள மதுரை அணி, 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேலம் அணிக்கு நிர்ணயித்துள்ளது.