விராட் கோலியுடன் பேச ஒரு 20 நிமிடம் கிடைத்தால் போதும்.. அவரை ஃபார்முக்கு கொண்டு வந்துருவேன் - சுனில் கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Jul 19, 2022, 3:39 PM IST
Highlights

விராட் கோலியுடன் பேசுவதற்கு 20 நிமிடங்கள் கிடைத்தால் போதும்; ஃபார்மில் இல்லாத கோலியை ஃபார்முக்கு கொண்டு வந்துவிடுவேன் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, 71வது சதத்தை இரண்டரை ஆண்டுகளாக அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

கடைசியாக 2019 நவம்பர் மாதம் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவித்துவருகிறார்.

இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அருமையான ஷாட்டுகளை மிகவும் நேர்த்தியாக ஆடி நல்ல விதமாகத்தான் தொடங்கினார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆடியதை பார்க்கையில், கண்டிப்பாக அவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் உறுதி என்றுதான் தோன்றியது. அவர் ஃபார்மில் இல்லாத வீரர் போல ஆடவில்லை. மிகவும் நேர்த்தியாக ஆடினார். ஆனாலும் ஒரு இன்னிங்ஸில் கூட பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் ஆடிய கோலி மொத்தமாக 12 ரன்கள் மட்டுமே அடித்தார். ஒருநாள் போட்டிகளில் 16 மற்றும் 17 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். கோலி ஸ்கோர் செய்யாதது அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திவருகிறது.

விராட் கோலி என்ற அடையாளத்துக்காக ஃபார்மில் இல்லாத அவரை அணியில் வைத்துக்கொண்டிருக்காமல், அணியின் நலன் கருதி ஃபார்மில் உள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறினாலும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் கோலிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க - நான் இன்றைக்கு ஒரு ஆளா இருக்கேன்னா அதுக்கு ரோஹித் தான் காரணம்..! சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

இந்நிலையில், விராட் கோலியை தன்னால் வெறும் 20 நிமிடங்களில் ஃபார்முக்கு கொண்டுவர முடியும் என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், விராட் கோலியின் பேசுவதற்கு 20 நிமிடங்கள் கிடைத்தால் போதும். அவரிடம் சில விஷயங்களை என்னால் கூற முடியும்.  அது கண்டிப்பாக அவருக்கு உதவும். குறிப்பாக ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளுக்கு ஆட்டமிழப்பது குறித்து அவரிடம் பேசவேண்டும். தொடக்க வீரர்களுக்கு அந்த லைன் பிரச்னையாக இருக்கும். அதனால் சில விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும். ஒரு 20 நிமிடம் கிடைத்தால் நிறைய விஷயங்களை விராட் கோலியிடம் கூறி அவரை மீண்டும் பெரிய ஸ்கோர் செய்யவைக்க முடியும் என்றார் கவாஸ்கர்.
 

click me!