
அயர்லாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அயர்லாந்து அணி:
பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), காரெத் டிலானி, ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்ஃபெர், ஜார்ஜ் டாக்ரெல், லார்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), மார்க் அடைர், பாரி மெக்கார்த்தி, க்ரைக் யங், ஜோஷுவா லிட்டில்.
நியூசிலாந்து அணி:
மார்டின் கப்டில், ஃபின் ஆலன், டேன் க்ளீவர் (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், ஜேக்கப் டஃபி.
இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸின் திடீர் ஓய்வுக்கு இதுதான் காரணம்
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக தொடங்கினார். 12 பந்தில் 24 ரன்கள் அடித்த அவரை நீடிக்க விடாமல் மார்க் அடைர் வீழ்த்தினார். ஃபின் ஆலன் (1), க்ளீவர் (5) ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் ஜோஷுவா லிட்டில்.
அதன்பின்னர் க்ளென் ஃபிலிப்ஸும் ஜிம்மி நீஷமும் அடித்து ஆடினர். அடித்து ஆடி 16 பந்தில் 29 ரன்கள் அடித்து நீஷம் ஆட்டமிழந்தார். ஆனால் பொறுப்புடன் நிலைத்து நின்று அடித்து ஆடிய க்ளென் ஃபிலிப்ஸ் அரைசதம் அடித்தார். 52 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 69 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று முடித்து கொடுத்தார் ஃபிலிப்ஸ்.
நியூசிலாந்து அணி 20 ஓவரில் 173 ரன்களை குவிக்க, 174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பால் ஸ்டர்லிங், பால்பிர்னி, ஹாரி டெக்டார் என அந்த அணியின் முக்கியமான வீரர்கள் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அதிகபட்சமாக காம்ஃபெர் 29 ரன்களும், மார்க் அடைர் 25 ரன்களும் மட்டுமே அடித்தனர்.
இதையும் படிங்க - நான் இன்றைக்கு ஒரு ஆளா இருக்கேன்னா அதுக்கு ரோஹித் தான் காரணம்..! சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி
நியூசிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய லாக்கி ஃபெர்குசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அயர்லாந்து வீரர்கள் யாருமே சரியாக ஆடாததால் 18.2 ஓவரில் 142 ரன்களுக்கு அயர்லாந்து அணி ஆல் அவுட்டாக, 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி.