IRE vs NZ முதல் டி20: க்ளென் ஃபிலிப்ஸ் அதிரடி அரைசதம்.. அயர்லாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து

Published : Jul 18, 2022, 10:40 PM IST
IRE vs NZ முதல் டி20: க்ளென் ஃபிலிப்ஸ் அதிரடி அரைசதம்.. அயர்லாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து

சுருக்கம்

க்ளென் ஃபிலிப்ஸின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 173 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 174 ரன்கள் என்ற சவாலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.  

அயர்லாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), காரெத் டிலானி, ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்ஃபெர், ஜார்ஜ் டாக்ரெல், லார்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), மார்க் அடைர், பாரி மெக்கார்த்தி, க்ரைக் யங், ஜோஷுவா லிட்டில்.

இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸின் திடீர் ஓய்வுக்கு இதுதான் காரணம்

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், ஃபின் ஆலன், டேன் க்ளீவர் (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், ஜேக்கப் டஃபி.
 
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக தொடங்கினார். 12 பந்தில் 24 ரன்கள் அடித்த அவரை நீடிக்க விடாமல் மார்க் அடைர் வீழ்த்தினார். ஃபின் ஆலன் (1), க்ளீவர் (5) ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் ஜோஷுவா லிட்டில்.

அதன்பின்னர் க்ளென் ஃபிலிப்ஸும் ஜிம்மி நீஷமும் அடித்து ஆடினர். அடித்து ஆடி 16 பந்தில் 29 ரன்கள் அடித்து நீஷம் ஆட்டமிழந்தார். ஆனால் பொறுப்புடன் நிலைத்து நின்று அடித்து ஆடிய க்ளென் ஃபிலிப்ஸ் அரைசதம் அடித்தார். 52 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 69 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று முடித்து கொடுத்தார் ஃபிலிப்ஸ்.

இதையும் படிங்க - சர்வதேச கிரிக்கெட்டில் முதல் & ஒரே இந்திய வீரர்..! ஹர்திக் பாண்டியா வரலாற்று சாதனை.. ஷேன் வாட்சனுடன் இணைந்தார்

ஃபிலிப்ஸின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 173 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 174 ரன்கள் என்ற சவாலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi Net Worth: 15 வயதில் கோடீஸ்வரன்.. சொகுசு பங்களா, கார்கள்.. பிரம்மிக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு!
எவ்ளோ பெரிய பிஸ்தா பெளலரா இருந்தாலும் ஈவு இரக்கம் இல்லாம அடிப்பது எப்படி? வைபவ் சூர்யவன்ஷி சொன்ன ட்ரிக்