
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவருபவர்.
அண்மையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் பென் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுவருகிறது.
இதையும் படிங்க - இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து..? ஷேன் வார்ன் மாதிரியான அதிசய பந்தை வீசி அசத்திய யாசிர் ஷா.. வைரல் வீடியோ
இந்நிலையில், இன்று திடீரென ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ். 2011ம் ஆண்டிலிருந்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடிவரும் பென் ஸ்டோக்ஸ் 104 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2919 ரன்கள் அடித்துள்ளார்; 74 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி முடித்த பென் ஸ்டோக்ஸ், நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி ஆடும் முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே ஸ்டோக்ஸ் ஓய்வு அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார்.
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், இது மிகவும் கடினமான முடிவுதான். நான் இங்கிலாந்துக்காக ஆடிய ஒவ்வொரு நொடியையும் அனுபவித்தே ஆடினேன். இது அருமையான பயணமாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் எனது அணிக்கு என்னால் 100 சதவிகித பங்களிப்பை வழங்க முடியவில்லை.
இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் ஆடுவது கடினமாக உள்ளது. என்னால் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியவில்லை. எனவே ஒரு இடத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனது இடத்தில், அடுத்த தலைமுறைக்கான ஒரு வீரர் வாய்ப்பு பெறுவார். இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் நான் ஆடிய இந்த 11 ஆண்டுகள் அருமையானது என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார்.