
1993ம் ஆண்டு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக் கேட்டிங்கிற்கு, மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் சுழல் ஜாம்பவான் வீசிய பந்து நூற்றாண்டின் சிறந்த பந்தாக பார்க்கப்படுகிறது. வலது கை பேட்ஸ்மேனான மைக் கேட்டிங்கிற்கு லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி ஆஃப் ஸ்டம்ப்பை கழட்டியது, ஷேன் வார்ன் வீசிய அந்த மாயாஜால சுழற்பந்து. ஸ்டம்ப்பை பறிகொடுத்த அடுத்த சில நொடிகள் அதிர்ந்து நிற்பார் மைக் கேட்டிங்.
அதேமாதிரியான ஒரு பந்தை இப்போது இலங்கை வீரர் குசால் மெண்டிஸுக்கு வீசியிருக்கிறார் பாகிஸ்தான் ரிஸ்ட் ஸ்பின்னர் யாசிர் ஷா.
இதையும் படிங்க - சர்வதேச கிரிக்கெட்டில் முதல் & ஒரே இந்திய வீரர்..! ஹர்திக் பாண்டியா வரலாற்று சாதனை.. ஷேன் வாட்சனுடன் இணைந்தார்
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி காலேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களும், பாகிஸ்தான் அணி 218 ரன்களும் அடித்தன.
4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் அடித்து, 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2வது இன்னிங்ஸில் ஒஷாடா ஃபெர்னாண்டோ (64), குசால் மெண்டிஸ்(76) மற்றும் தினேஷ் சண்டிமால் (85*) ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குசால் மெண்டிஸை, மாயாஜால சுழல் மூலம் ஸ்டம்ப்பை கழட்டி அதிர்ச்சியளித்தார் யாசிர் ஷா. குசால் மெண்டிஸுக்கு ரிஸ்ட் ஸ்பின்னரான யாசிர் ஷா வீசிய அந்த பந்து, லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி, ஆஃப் ஸ்டம்ப்பை கழட்டியது. அந்த பந்தை கண்டு அதிர்ந்தார் குசால் மெண்டிஸ்.
இதையும் படிங்க - சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் திடீர் ஓய்வு.!
1993ல் மைக் கேட்டிங்கிற்கு ஷேன் வார்ன் வீசிய அந்த மாயாஜால பந்து, நூற்றாண்டின் சிறந்த பந்தாக பார்க்கப்படுகிறது. அது நூற்றாண்டின் சிறந்த பந்து என்றால், அதே மாதிரி யாசிர் ஷா வீசிய இந்த பந்தும் நூற்றாண்டின் சிறந்த பந்துதான். ஏனெனில், ஷேன் வார்னின் அந்த பந்தை அப்படியே பார்ப்பதை போன்றுதான் இருந்தது, யாசிர் ஷா வீசிய இந்த பந்து. யாசிர் ஷா வீசிய அந்த மாயாஜால சுழற்பந்து சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.