வெஸ்ட் இண்டீஸின் அதிரடி மன்னன் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

Published : Jul 19, 2022, 10:36 AM IST
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி மன்னன் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.  

வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2006ம் ஆண்டு அறிமுகமான லெண்டல் சிம்மன்ஸ் 2021ம் ஆண்டு வரை ஆடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 68 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் ஆடியுள்ள லெண்டல் சிம்மன்ஸ், 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார்.

68 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1958 ரன்களையும், 66 டி20 போட்டிகளில் ஆடி 1527 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2015ம் ஆண்டுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சிம்மன்ஸ் ஆடவில்லை. டி20 கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த ஆண்டு ஆடினார். அதன்பின்னர் ஆடவில்லை.

இதையும் படிங்க - இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து..? ஷேன் வார்ன் மாதிரியான அதிசய பந்தை வீசி அசத்திய யாசிர் ஷா.. வைரல் வீடியோ

2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பையை வென்றபோது வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கிய அங்கம் வகித்தவர் சிம்மன்ஸ்.

2016 டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவிற்கு எதிராக அவர் அடித்த 82 ரன்கள் தான், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி, பின்னர் இறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை வென்றது. அந்தவகையில், அந்த கோப்பையை வெல்ல முக்கிய காரணங்களில் சிம்மன்ஸும் ஒருவர்.

ஐபிஎல் உட்பட உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் ஆடியிருக்கிறார். ஐபிஎல்லில் 2014லிருந்து 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார் சிம்மன்ஸ். 

இதையும் படிங்க - சர்வதேச கிரிக்கெட்டில் முதல் & ஒரே இந்திய வீரர்..! ஹர்திக் பாண்டியா வரலாற்று சாதனை.. ஷேன் வாட்சனுடன் இணைந்தார்

37 வயதான லெண்டல் சிம்மன்ஸுக்கு இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் கிடைக்காது. எனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார் லெண்டல் சிம்மன்ஸ்.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?