ஹர்திக் பாண்டியா மாதிரியான பிளேயரை உட்கார வச்சுட்டு ஆடியதால் தான் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது - கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Oct 29, 2022, 3:04 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியா மாதிரியான பிளேயர் முகமது வாசிம்; அவரை இந்தியாவிற்கு எதிராக ஆடவைக்காததால் தான் பாகிஸ்தான் தோற்றது என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்று பல முன்னாள் வீரர்களால் உறுதியாக நம்பப்பட்ட பாகிஸ்தான் அணி இப்போதைக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்திருக்கிறது.

க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின்னர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் வெறும் 131 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான். 

தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங்கை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியாது! இந்தியஅணி தோற்றுவிடும்- லான்ஸ் க்ளூசனர்

முதல் 2 போட்டிகளிலும் தோற்ற பாகிஸ்தான் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள க்ரூப் 2-ல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்றுவருவதால் பாகிஸ்தான் அணி இனி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகக்கடினம். வாய்ப்பே இல்லை என்று கூட சொல்லலாம்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பவுலிங் வீசியதுடன், பேட்டிங்கிலும் 2 நல்ல ஷாட்களை ஆடிய முகமது வாசிமை இந்தியாவிற்கு எதிராக ஆடவைக்காதது மிகப்பெரிய தவறு கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். 

இந்தியாவிற்கு எதிராக ஆடிய ஆசிஃப் அலியை நீக்கிவிட்டு கூடுதல் ஃபாஸ்ட் பவுலராக முகமது வாசிமை ஜிம்பாப்வேவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆடவைத்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய முகமது வாசிம், 4 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கிலும் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் அடித்தார்.

பாகிஸ்தானை பங்கமாய் கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர்..! கோபப்படாமல் பெருந்தன்மையுடன் பதிலடி கொடுத்த பாக்., பிரதமர்

இந்நிலையில், அவரை ஆடவைக்காதது மிகப்பெரிய தவறு என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. இதற்கு முன் பாகிஸ்தான் ஆடிய டி20 போட்டிகளில் ஃபகர் ஜமான் 3 அல்லது 4ம் வரிசையில் பேட்டிங் ஆடினார். டி20 உலக கோப்பையில் அவர் ஆடவில்லை. ஷான் மசூத் 3ம் வரிசையில் நன்றாகத்தான் ஆடுகிறார். பாகிஸ்தான் அணி தேர்வு சரியில்லை. ஆஸ்திரேலிய கண்டிஷனில் அருமையான சீம் பவுலரான முகமது வாசிம் கண்டிப்பாக ஆடவேண்டும். ஜிம்பாப்வேவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசினார். பேட்டிங்கிலும் 2 நல்ல ஷாட்களை ஆடினார். மிகத்திறமையான வீரர் முகமது வாசிம். ஹர்திக் பாண்டியா மாதிரியான வீரர் முகமது வாசிம். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அவரை ஆடவைக்கவில்லை. 2 ஸ்பின்னர்களுடன் ஆடினார்கள். சிட்னி மாதிரியான ஆடுகளங்களில் அது பரவாயில்லை. ஆனால் மற்ற ஆடுகளங்களில் 3-4 ஓவர்கள் பவுலிங்கும் வீசி, கடைசி சில ஓவர்களில் 30 ரன்களும் அடிக்கக்கூடிய ஒரு வீரர் கண்டிப்பாக அணியில் தேவை என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

click me!