ஆஸி.,யை அலறவிட்ட நியூசி., அதிரடி மன்னர்களை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கி அனுப்பிய இலங்கை ஸ்பின்னர்கள்

By karthikeyan V  |  First Published Oct 29, 2022, 1:53 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு  எதிராக 16 பந்தில் 42 ரன்களை விளாசி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்த நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலனை முதல் ஓவரிலேயே வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார். 3வது ஓவரிலேயே டெவான் கான்வேவை வீழ்த்தினார் தனஞ்செயா டி சில்வா. 
 


டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து - இலங்கை அணிகள் ஆடிவருகின்றன. சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றி வேட்கையில் களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அணியில் கடந்த போட்டியில் காயமடைந்த ஃபாஸ்ட் பவுலர் பினுரா ஃபெர்னாண்டோவுக்கு பதிலாக கசுன் ரஜிதா ஆடுகிறார். நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேனுக்கு பதிலாக டேரைல் மிட்செல் சேர்க்கப்பட்டுள்ளார்.

Latest Videos

undefined

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டேரைல் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.

டி20 உலக கோப்பை: மழையால் ரத்தாகும் போட்டிகள்.. குறையும் சுவாரஸ்யம்..! இதோ புள்ளி பட்டியல்

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலனும் டெவான் கான்வேவும் களமிறங்கினர். ஃபின் ஆலன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை அடி வெளுத்து வாங்கினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 16 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாசி மிரட்டலான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 

அவர் அமைத்து கொடுத்த தொடக்கத்தால் தான் நியூசிலாந்து அணி அந்த போட்டியில் 200 ரன்களை குவித்தது. எனவே ஃபின் ஆலனை ஆரம்பத்திலேயே அடிக்கவிடக்கூடாது என்பதற்காக முதல் ஓவரை ஃபாஸ்ட் பவுலரிடம் கொடுக்காமல் ஸ்பின்னரான மஹீஷ் தீக்‌ஷனாவிடம் கொடுத்தார் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா. 

ஷனாகாவின் வியூகம் பலனளித்தது. முதல் ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஃபின் ஆலனை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் மஹீஷ் தீக்‌ஷனா. 3வது ஓவரை தனஞ்செயா டி சில்வாவிடம் கொடுத்தார் ஷனாகா. அந்த முயற்சியும் பலனளித்தது. 3வது ஓவரில் நியூசிலாந்தின் மற்றொரு அதிரடி வீரரான டெவான் கான்வேவை ஒரு ரன்னில் வீழ்த்தினார் தனஞ்செயா. 7 ரன்னுக்கு நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டி மழையால் ரத்து..! பெரும் ஏமாற்றம்

டெவான் கான்வே (92) மற்றும் ஃபின் ஆலன்(42) ஆகிய இருவரும்தான் ஆஸி.,க்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடியவர்கள். அவர்கள் இருவரையுமே தலா ஒரு ரன்னுக்கு வீழ்த்தி அசத்தினர் இலங்கை ஸ்பின்னர்கள்.
 

click me!