தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங்கை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியாது! இந்தியஅணி தோற்றுவிடும்- லான்ஸ் க்ளூசனர்

By karthikeyan V  |  First Published Oct 28, 2022, 9:59 PM IST

தென்னாப்பிரிக்க அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை இந்திய வீரர்கள் சமாளிப்பது மிகக்கடினம் என்றும் டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றுவிடும் என்றும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் லான்ஸ் க்ளூசனர் தெரிவித்துள்ளார்.
 


டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மழையால் சில போட்டிகள் ரத்தானது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. க்ரூப் 1 போட்டிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டன. க்ரூப் 2-ல் தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே போட்டி மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மற்ற போட்டிகள் அனைத்தும் முழுமையாக நடந்தன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பும்ரா இல்லாதது பாதிப்பாக அமையாதவகையில், அருமையாக விளையாடி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஜிம்பாப்வேவுடன் புள்ளியை பகிர்ந்த தென்னாப்பிரிக்கா, அடுத்த போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக அபார வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

Latest Videos

undefined

டி20 உலக கோப்பை: நியூசிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்வதால் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே வரும் 30ம் தேதி பெர்த்தில் நடக்கும் போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்திய அணியை பொறுத்தமட்டில் ரோஹித், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல ஃபார்மில் சிறப்பாக பேட்டிங் ஆடிவருகின்றனர். ராகுல் மட்டுமே கவலையளிக்கிறார். இந்திய அணி முந்தைய 2 போட்டிகளிலும் டெத் பவுலிங் சிறப்பாக வீசியிருந்தாலும், அது இன்னும் கவலையாகவே உள்ளது. ஆனால் புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் அருமையாக பந்துவீசிவருகின்றனர்.

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் குயிண்டன் டி காக், ரைலீ ரூசோ, டேவிட் மில்லர் ஆகியோர் டாப் ஃபார்மில் உள்ளனர். டி காக் அபாரமாக ஆடிவருகிறார். ரைலீ ரூசோ வங்கதேசத்துக்கு எதிராக அருமையான சதமடித்திருக்கிறார். டேவிட் மில்லர், மார்க்ரம் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில் நோர்க்யா 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசி மிரட்டுகிறார். ரபாடா, இங்கிடி, வைன் பார்னெல் ஆகியோரும் அபாரமாக பந்துவீசுகின்றனர். ஸ்பின்னர்கள் ஷம்ஸி மற்றும் கேஷவ் மஹராஜ் ஆகிய இருவரும் மிக அபாரமாக பந்துவீசி அசத்திவருகின்றனர். எனவே இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

பாகிஸ்தானை பங்கமாய் கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர்..! கோபப்படாமல் பெருந்தன்மையுடன் பதிலடி கொடுத்த பாக்., பிரதமர்

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக முன்னாள் ஜாம்பவான் லான்ஸ் க்ளூசனர், பெர்த்தில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி கூடுதல் ஃபாஸ்ட் பவுலருடன் ஆடும். ஷம்ஸியின் பவுலிங் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவர் விக்கெட் வீழ்த்தும் பவுலர். ப்ரிட்டோரியஸ் டி20 உலக கோப்பையில் ஆடாததால் அணி காம்பினேஷனில் தென்னாப்பிரிக்க அணி சிறிய மாற்றம் செய்ய வேண்டும். பெர்த்தில் தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் என்று லான்ஸ் க்ளூசனர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!