டி20 உலக கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அதிரடி முடிவு.! 2 அணிகளிலும் ஒரு மாற்றம்

டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

new zealand win toss opt to bat against sri lanka in t20 world cup

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மெல்பர்னில் மழை காரணமாக அங்கு நடக்க வேண்டிய போட்டிகள் மட்டும் சில பாதிக்கப்பட்டன. பெரும்பாலும் க்ரூப் 1 போட்டிகள் தான் பாதிக்கப்பட்டன.

இன்று ஒரேயொரு போட்டி மட்டுமே நடக்கிறது. சிட்னியில் நடக்கும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Latest Videos

தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங்கை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியாது! இந்தியஅணி தோற்றுவிடும்- லான்ஸ் க்ளூசனர்

 இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அணியில் கடந்த போட்டியில் காயமடைந்த ஃபாஸ்ட் பவுலர் பினுரா ஃபெர்னாண்டோவுக்கு பதிலாக கசுன் ரஜிதா ஆடுகிறார். நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேனுக்கு பதிலாக டேரைல் மிட்செல் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டேரைல் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.

பாகிஸ்தானை பங்கமாய் கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர்..! கோபப்படாமல் பெருந்தன்மையுடன் பதிலடி கொடுத்த பாக்., பிரதமர்

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image