ICC WTC ஃபைனலில் தயவுசெய்து அந்த பையனை ஆடவைக்காதீங்க.. இவரே போதும்..! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan V  |  First Published Mar 14, 2023, 5:42 PM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்தை ஆடவைக்காமல், கேஎல் ராகுலையே விக்கெட் கீப்பராக ஆடவைக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 


ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் சீசன் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி, 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்தடுத்து 2 முறை ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறின. வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் லார்ட்ஸில் ஃபைனல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

Tap to resize

Latest Videos

ஃபைனலுக்கு முன் கடைசியாக அண்மையில் ஆடிய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் இந்திய அணி ஃபைனலில் ஆடினாலும், பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 2 மிகப்பெரிய வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடமாட்டார்கள். அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.

நான் 40 ரன் அடிச்சப்பவே கண்டிப்பா 150 அடிப்பேன்னு தெரியும்..! ராகுல் டிராவிட்டிடம் மனம் திறந்த விராட் கோலி

விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், பேட்டிங்கில் பின்வரிசையில் வலுசேர்ப்பவர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 10-15 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அவர் ஆடாதது மிடில் ஆர்டரில் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக ஆடினார். பேட்டிங்கில் சொதப்பிய பரத், விக்கெட் கீப்பிங்கிலும் தவறுகளை செய்தார். மிகச்சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார் என்று சொல்லுமளவிற்கு செய்யவில்லை.

இந்திய அணியின் தொடக்க வீரராக ஆடிய ராகுல் சொதப்பியதால், கடைசி 2 போட்டிகளில் ஷுப்மன் கில் தொடக்க வீரராக ஆடினார். இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர்கள் இருவரையுமே ஆடவைத்துவிட்டு, கேஏஸ் பரத்தை அணியிலிருந்து நீக்கிவிடலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

எல்லா டீமும் பாகிஸ்தானுக்கு வரும்போது இந்தியாவிற்கு மட்டும் பாதுகாப்பு பிரச்னையா..? PCB தலைவர் கேள்வி

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக ஆடலாம். அவர் 5-6ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம். அவர் அந்த பேட்டிங் வரிசையில் ஆடினால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுப்படும். கடந்த ஆண்டு இங்கிலாந்து லார்ட்ஸில் சதமடித்தார். எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ராகுல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

click me!