BAN vs ENG: லிட்டன் தாஸ் அதிரடி அரைசதம்.. சவாலான இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்! ஒயிட்வாஷை தடுக்குமா இங்கிலாந்து?

Published : Mar 14, 2023, 04:30 PM ISTUpdated : Mar 14, 2023, 04:38 PM IST
BAN vs ENG: லிட்டன் தாஸ் அதிரடி அரைசதம்.. சவாலான இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்! ஒயிட்வாஷை தடுக்குமா இங்கிலாந்து?

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 158 ரன்கள் அடித்து 159 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.  

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என வென்றது.

அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதலிரண்டு டி20 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று வங்கதேச அணி டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

நான் 40 ரன் அடிச்சப்பவே கண்டிப்பா 150 அடிப்பேன்னு தெரியும்..! ராகுல் டிராவிட்டிடம் மனம் திறந்த விராட் கோலி

வங்கதேச அணி: 

லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ரோனி தலுக்தர், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, டௌஹிட் ரிடாய், ஷமிம் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), டன்விர் இஸ்லாம், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்.

இங்கிலாந்து அணி: 

ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர். 

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் ரோனி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 57 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 73 ரன்களை குவித்தார் லிட்டன் தாஸ். ஷாண்டோ 36 பந்தில் 47 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது.

எல்லா டீமும் பாகிஸ்தானுக்கு வரும்போது இந்தியாவிற்கு மட்டும் பாதுகாப்பு பிரச்னையா..? PCB தலைவர் கேள்வி

159 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமான விரட்டினால், டி20 சாம்பியனான இங்கிலாந்து அணி ஒயிட்வாஷை தடுக்கலாம்.
 

PREV
click me!

Recommended Stories

காதலியை கரம் பிடிக்கும் ஷிகர் தவான்.. 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?
IND vs NZ: தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!