பேட்டிங் ஆட முடியும்னா, ஏன் முன்னாடியே இறங்கல..? ரோஹித்தை விளாசிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Dec 8, 2022, 5:58 PM IST
Highlights

காயத்துடன் ரோஹித் பேட்டிங் ஆடுவதாக இருந்தால், ஏன் 9ம் வரிசையில் ஆட வேண்டும்.? 7ம் வரிசையிலேயே இறங்கியிருக்கலாமே என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - வங்கதேசம்  இடையேயான 2வது ஒருநாள் போட்டி தாக்காவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, மெஹிடி ஹசனின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 271 ரன்களை குவித்தது. 

272 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா காயம் காரணமாக ஓபனிங்கில் பேட்டிங் ஆட வரவில்லை. 207 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் வேறுவழியின்றி காயத்துடன் களமிறங்கிய ரோஹித் சர்மா அதிரடியாக பேட்டிங் ஆடி 28 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்களை குவித்து கடைசி வரை போராடியும் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

AUS vs WI: 2வது டெஸ்ட்டில் லபுஷேன், டிராவிஸ் ஹெட் அபார சதம்.. கேப்டன்சியை ஏற்ற ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்

ஷ்ரேயாஸ் ஐயர் (82) மற்றும் அக்ஸர் படேல்(56) ஆகிய இருவரும் நன்றாக ஆடினர். ஆனால் அவர்களுக்கு ரோஹித் சர்மா பேட்டிங் ஆட வருவார் என்று தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால், நன்றாக ஆடிய அக்ஸர் படேல் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு முயன்றிருக்கமாட்டார். ரோஹித் பேட்டிங் ஆடுவதென்றால், 9ம் வரிசையில் இறங்கியதற்கு பதிலாக 7ம் வரிசையில் இறங்கியிருந்தால் ஜெயித்திருக்கலாம் என்பது கவாஸ்கரின் கருத்து.

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மாவின் பேட்டிங் தரமும், கிளாசும் அனைவருக்கும் தெரியும். இந்திய அணி இலக்கை நெருங்கி சென்றது. அவர் பேட்டிங் ஆடுவதென்றால்,  9ம் வரிசையில் இறங்காமல் 7ம் வரிசையில் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும்.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட், ஒருநாள் போட்டி அட்டவணை வெளியீடு

ரோஹித் இனிமேல் பேட்டிங் ஆடமாட்டார் என்று நினைத்துத்தான் அக்ஸர் படேல் கட்டாயத்தின் பேரில் பெரிய ஷாட்டுக்கு முயற்சித்தார். ரோஹித் ஆடுவார் என்று தெரிந்திருந்தால் வேறு மாதிரி ஆடியிருப்பார். ரோஹித் 7ம் வரிசையில் ஆடியிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் என்று கவாஸ்கர் கூறினார்.
 

click me!