இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் வரை தொடர்ச்சியாக 3 அணிகள் இந்தியாவிற்கு வந்து கிரிக்கெட் தொடரில் ஆடுகின்றன. இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் இந்தியாவிற்கு வந்து கிரிக்கெட் தொடரில் ஆடும் நிலையில், இந்த 3 தொடர்களுக்கான முழு போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறது இலங்கை அணி. ஜனவரி 3 முதல் 15 வரை இந்தியா - இலங்கை இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. அதன்பின்னர் இந்தியாவிற்கு வரும் நியூசிலாந்து அணியும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள்.. வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா
அதைத்தொடர்ந்து இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணி, பிப்ரவரி 9லிருந்து மார்ச் 22 வரை நீண்ட தொடரில் ஆடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.
இந்த தொடர்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை தொடர்:
ஜனவரி 3 - முதல் டி20 - மும்பை
ஜனவரி 5 - 2வது டி20 - புனே
ஜனவரி 7 - 3வது டி20 - ராஜ்கோட்
ஜனவரி 10 - முதல் ஒருநாள் போட்டி - கவுஹாத்தி
ஜனவரி 12 - 2வது ஒருநாள் போட்டி - கொல்கத்தா
ஜனவரி 15 - 3வது ஒருநாள் போட்டி - திருவனந்தபுரம்
இந்தியா - நியூசிலாந்து தொடர்:
ஜனவரி 18 - முதல் ஒருநாள் போட்டி - ஹைதராபாத்
ஜனவரி 21 - 2வது ஒருநாள் போட்டி - ராய்பூர்
ஜனவரி 24 - 3வது ஒருநாள் போட்டி - இந்தூர்
ஜனவரி 27 - முதல் டி20 - ராஞ்சி
ஜனவரி 29 - 2வது டி20 - லக்னோ
பிப்ரவரி 1 - 3வது டி20 - அகமதாபாத்
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்:
பிப்ரவரி 9-13 - முதல் டெஸ்ட் - நாக்பூர்
பிப்ரவரி 17-21 - 2வது டெஸ்ட் - டெல்லி
மார்ச் 1-5 - 3வது டெஸ்ட் - தர்மசாலா
மார்ச் 9-13 - 4வது டெஸ்ட் - அகமதாபாத்
மார்ச் 17 - முதல் ஒருநாள் போட்டி - மும்பை
மார்ச் 19 - 2வது ஒருநாள் போட்டி - விசாகப்பட்டினம்
மார்ச் 22 - 3வது ஒருநாள் போட்டி - சென்னை