IPL 2021 டெல்லி அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கே அணி அவரை கண்டிப்பா ஆடவைக்கணும்..! கவாஸ்கர் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Oct 10, 2021, 5:53 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக சுரேஷ் ரெய்னாவை ஆடவைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
 

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் ரெய்னா, பல அபாரமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடி சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார்.

பல இக்கட்டான நிலைகளில், சிஎஸ்கே அணியை தனி ஒருவனாக தலைநிமிர்த்தியவர் ரெய்னா. சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வென்ற 3 சீசன்களிலும் ரெய்னாவின் பங்களிப்பு அதிகம்.

ஆனால் கடந்த சில சீசன்களாக சரியாக ஆடமுடியாமல் திணறிவருகிறார். கடந்த சீசனில் ரெய்னா ஆடாத நிலையில், அந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது சிஎஸ்கே அணி. இந்நிலையில், இந்த சீசனில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த சீசனில் சரியாக ஆடமுடியாமல் கடுமையாக திணறிவருகிறார்.

இதையும் படிங்க - IPL 2021 இந்த ஒரு விஷயத்துல நாங்க ரொம்ப கொடுத்துவச்ச டீம்! டெல்லி கேபிடள்ஸ் ஹெட்கோச் ரிக்கி பாண்டிங் பெருமிதம்

அதன் விளைவாக, லீக் சுற்றின் கடைசி ஒருசில போட்டிகளில் ரெய்னா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா அணியில் சேர்க்கப்பட்டார். அவர் அதைவிட மோசமாக ஆடினார். இன்று டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி ஆடவுள்ள நிலையில், இந்த போட்டியில் ரெய்னாவை ஆடவைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், பிளே ஆஃபில் இதுவரை ரெய்னா மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார். பிளே ஆஃபில் அவர் ஆடிய அனுபவத்தின் அடிப்படையில், அவரை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும். ரெய்னா மேட்ச் வின்னர். கடந்த சில வருடங்களாக அவர் சரியாக ஆடமுடியாமல் திணறினாலும், ஆட்டத்தை திருப்பவல்ல திறமை வாய்ந்தவர் அவர்.

இதையும் படிங்க - இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட முடியும்.! ரமீஸ் ராஜா கருத்து

நோர்க்யா, ரபாடா, ஆவேஷ் கான் ஆகியோர் கண்டிப்பாக ரெய்னாவை டெஸ்ட் செய்வார்கள். ஆனால் ரெய்னாவால் சிஎஸ்கேவை ஃபைனலுக்கு அழைத்துச்செல்ல முடியும் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

click me!