IPL 2021 அந்த அணி தான் கோப்பையை ஜெயிக்கப்போகுது..! ஆனால் அந்த டீம் ஜெயிச்சாதான் நல்லா இருக்கும் - கம்பீர்

By karthikeyan VFirst Published Oct 10, 2021, 4:02 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் எந்த அணி டைட்டிலை ஜெயிக்கும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளன. 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறவில்லை.

பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ள 4 அணிகளில் சிஎஸ்கே ஏற்கனவே 3 முறையும், கேகேஆர் 2 முறையும் கோப்பையை வென்ற அணிகள். ஆனால் ஆர்சிபியும் டெல்லி கேபிடள்ஸும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடிவரும் அணிகள்.

கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்றும், கோப்பையை வெல்லமுடியாத விரக்தியில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனுக்கு மிகத்தீவிரமாக தயாராகிவந்து அருமையாக ஆடி வெற்றிகளை குவித்து, புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது.

இதையும் படிங்க - இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட முடியும்.! ரமீஸ் ராஜா கருத்து

அதேபோல ஆர்சிபி அணியிலும் கேஎஸ் பரத், மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் செம ஃபார்மில் அடி நொறுக்கிவருகின்றனர். எனவே இந்த 2 அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

இந்நிலையில், இந்த சீசனில் எந்த அணி டைட்டிலை ஜெயிக்கும் என்பது குறித்து பேசியுள்ள, கேகேஆர் அணிக்கு 2 முறை கோப்பையை வென்று கொடுத்த கௌதம் கம்பீர், புதிய அணி முதல் முறையாக கோப்பையை ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - முன்னாள் கேப்டன் என்பதற்காக சும்மா டீம்ல எடுத்து வைப்பதுலாம் முட்டாள்தனம்.! பாக்., அணி தேர்வை விளாசிய இன்சமாம்

இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், எனக்கு கேகேஆர் தான் ஜெயிக்க வேண்டும். என் மனமும் கேகேஆர் தான் கோப்பையை ஜெயிக்கப்போகிறது என்று சொல்கிறது. ஆனால் புதிய வெற்றியாளர் வேண்டும் என நான் நினைக்கிறேன். டெல்லி கேபிடள்ஸ் - ஆர்சிபி ஆகிய 2 அணிகளில் ஒரு அணி கோப்பையை புதிதாக ஜெயிப்பது ஐபிஎல் தொடருக்கு நல்லது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

click me!