IPL 2021 #DCvsCSK முதல் தகுதிச்சுற்று போட்டி: கண்டிப்பா அந்த அணி தான் ஜெயிக்கும்..! ஆகாஷ் சோப்ரா அதிரடி ஆருடம்

By karthikeyan VFirst Published Oct 10, 2021, 3:36 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, இந்த போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்று ஆருடமும் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. டெல்லி கேபிடள்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, கேகேஆர் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் இன்று துபாயில் நடக்கும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மோதுகின்றன.

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணி, எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன் மோதும். இந்த போட்டியில் வென்றால் நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறமுடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் தான் களமிறங்குகின்றன.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. டெல்லி கேபிடள்ஸ் அணியில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட தயாராக இருக்கும் பட்சத்தில், அவரை சேர்த்துக்கொண்டு ரிப்பல் படேலை நீக்கலாம் என சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த சீசனின் அமீரக பாகத்தில் ஸ்டோய்னிஸ் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க - இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட முடியும்.! ரமீஸ் ராஜா கருத்து

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரிப்பல் படேல்/மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்யா, ஆவேஷ் கான்.

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க - முன்னாள் கேப்டன் என்பதற்காக சும்மா டீம்ல எடுத்து வைப்பதுலாம் முட்டாள்தனம்.! பாக்., அணி தேர்வை விளாசிய இன்சமாம்

இந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி தான் வெற்றி பெறும் என ஆகாஷ் சோப்ரா ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

click me!