IPL 2021 இந்த ஒரு விஷயத்துல நாங்க ரொம்ப கொடுத்துவச்ச டீம்! டெல்லி கேபிடள்ஸ் ஹெட்கோச் ரிக்கி பாண்டிங் பெருமிதம்

By karthikeyan VFirst Published Oct 10, 2021, 4:31 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் நல்வாய்ப்பாக டெல்லி கேபிடள்ஸ் அணியில் நிறைய மாற்றங்களை செய்வதற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஒவ்வொரு சீசனிலும் ஆடும் 3 அணிகளில் டெல்லி கேபிடள்ஸும் ஒன்று. ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கான பிராசஸை ஒழுங்காக செய்வதில்லை.

ஆனால் டெல்லி கேபிடள்ஸ் அணி கடந்த 2-3 சீசன்களில் இளம் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட நல்ல கலவையிலான மற்றும் வலுவான அணியை கட்டமைத்து கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்ற அணிகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், அந்த அணியின் தலைமை பயிற்சியாளரும், லெஜண்ட் கிரிக்கெட்டருமான ரிக்கி பாண்டிங்.

ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ஆவேஷ் கான் என இளம் வீரர்களும், தவான், ஸ்மித், ரஹானே, அஷ்வின் என அனுபவ வீரர்களும் கலந்த அணியாக டெல்லி அணியை கட்டமைத்தார். பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என அனைத்துவகையிலும் வலுவான அணியாக உருவாக்கினார்.

பேட்டிங்கில் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தவான், ஸ்மித் ஆகியோரும், ஸ்பின் பவுலிங்கிற்கு அஷ்வின், அக்ஸர் படேல் என்ற 2 சிறந்த ஸ்பின்னர்களும், ஃபாஸ்ட் பவுலிங்கில் நோர்க்யா, ரபாடா என்ற 2 மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர்களுடன் நல்ல வேரியேஷனுடன் ஸ்மார்ட்டாக வீசும் ஆவேஷ் கானையும் பெற்றுள்ள டெல்லி அணி அருமையாக ஆடிவருகிறது.

இதையும் படிங்க - இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட முடியும்.! ரமீஸ் ராஜா கருத்து

கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்றும், கோப்பையை வெல்ல முடியாமல் போன டெல்லி அணி, இந்த சீசனில் கோப்பையை வெல்லும் தீவிரத்துடன் அபாரமாக ஆடி 20 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் இன்று சிஎஸ்கேவை எதிர்கொண்டு ஆடும் டெல்லி அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், டெல்லி அணி குறித்து பேசிய அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், இந்த சீசனில் நாங்கள் கொஞ்சம் அதிர்ஷ்டக்கார அணியாக திகழ்கிறோம். எங்கள் அணியில் நிறைய மாற்றங்கள் செய்வதற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது. வலுவான கோர் டீமை பெற்றிருக்கிறோம். ஷ்ரேயாஸ் ஐயரின் கம்பேக் அணிக்கு வலுசேர்த்தது. வோக்ஸ் ஆடாத நிலையில், நோர்க்யா 2ம் பாகத்தில் ஆடவந்தது நல்ல விஷயம். நோர்க்யா எப்போதுமே எங்கள் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.

இதையும் படிங்க - IPL 2021 அந்த அணி தான் கோப்பையை ஜெயிக்கப்போகுது..! ஆனால் அந்த டீம் ஜெயிச்சாதான் நல்லா இருக்கும் - கம்பீர்

எனவே எங்கள் அணியில் நிறைய மாற்றங்கள் செய்வதற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஒரு அணி என்பது ஒன்றிரண்டு சிறந்த வீரர்களை பெற்றிருப்பது அல்ல. 11 வீரர்களுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். அணிக்கு தேவையானபோது, அனைத்து வீரர்களுமே சிறப்பாக ஆட வேண்டும். அப்படியான பல வீரர்களை டெல்லி அணி பெற்றிருப்பதாக பாண்டிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
 

click me!