இந்தியாவின் ஆல்டைம் நம்பர் 1 கிரிக்கெட்டர் அவருதான்.! அவருக்கு அடுத்துதான் யாரா இருந்தாலும்.. கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 27, 2020, 3:49 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட்டின் ஆல்டைம் கிரேட் கிரிக்கெட்டர் கபில் தேவ் தான் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் ஒவ்வொரு காலக்கட்டத்திலுமே தலைசிறந்த வீரர்களை பெற்றிருக்கிறது. அந்தந்த காலக்கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியவர்களாக இந்திய வீரர்கள் இருந்துள்ளனர். ஆல்டைம் சிறந்த வீரர்களாக கபில் தேவ், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, தோனி, விராட் கோலி என மிகச்சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். 

ஆனால் இந்திய கிரிக்கெட்டின் ஆல்டைம் கிரேட் கிரிக்கெட்டர் என்றால் அது கபில் தேவ் தான் என்று அவரது சக வீரரும் முன்னாள் ஜாம்பவானுமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

1978ம் ஆண்டு 1994ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடிய கபில் தேவ், 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடி ரன்களையும் 225 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3783 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 253 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச்வின்னராக திகழ்ந்த கபில் தேவ், 1970-80களில் கோலோச்சிய கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1983 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். இந்திய கிரிக்கெட்டின் பெருமை மிக்க மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தருணம் அது. இன்றைக்கு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா கோலோச்சுவதற்கான விதையை அன்று விதைத்தவர் கபில் தேவ்.

அதிரடி பேட்டிங் மற்றும் அபாரமான் ஃபாஸ்ட் பவுலிங் என மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்த கபில் தேவ், மிகச்சிறந்த கேப்டனும் கூட. இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் கபில் தேவ். இந்நிலையில், கபில் தேவ் தான் இந்திய கிரிக்கெட்டின் ஆல்டைம் கிரேட் கிரிக்கெட்டர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் கவாஸ்கர். 

இந்தியா டுடேவில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே நம்பர் 1 என்றால் அது கபில் தேவ் தான். கபில் தான் பெஸ்ட்.. இந்தியாவின் ஆல்டைம் நம்பர் 1 வீரர் கபில் தேவ் தான். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தவர் அவர். பவுலிங் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் கபில் தேவ், அதிரடியாக பேட்டிங் ஆடி அதிவேகமாக 80-90 ரன்களை குவித்து ஆட்டத்தை தலைகீழாக மாற்றி வெற்றி பெற செய்வார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் கபில் தேவ். அதுமட்டுமல்லாது அபாரமான கேட்ச்களையும் பிடித்துள்ளார். எனவே கபில் தேவ் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் என்று கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். 

கபில் தேவும் கவாஸ்கரும் 1970களின் கடைசி மற்றும் 1980களில் இணைந்து இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்காற்றியதுடன், அணிக்கு பல வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளனர். 1983 உலக கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் கவாஸ்கரும் ஆடினார். இருவரும் இணைந்து இந்திய அணிக்காக, 1978 முதல் 1987 வரையிலான பத்தாண்டுகளில், 87 டெஸ்ட் மற்றும் 97 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளனர். 

click me!