நான்கரை வருஷத்துக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித்

By karthikeyan V  |  First Published Dec 7, 2022, 2:54 PM IST

நான்கரை ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
 


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடைக்கால கேப்டன்சி தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார்.

2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. அதனால் கேப்டன்சியை இழந்தார் ஸ்டீவ் ஸ்மித். அந்த சம்பவத்தின் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்துக்கு 2 ஆண்டுகள் கேப்டன்சி தடை விதிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

BAN vs IND: காயத்தால் களத்திலிருந்து வெளியேறி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ரோஹித் சர்மா

இதையடுத்து ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும், டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டனர். டிம் பெய்ன் பாலியல் சர்ச்சையால் ஓரங்கட்டப்பட்ட பின், பாட் கம்மின்ஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவரும் நிலையில், முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியின் போது காயமடைந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

ICC WTC புள்ளி பட்டியல்: பாகிஸ்தான் தோல்வியால் இந்தியாவிற்கு ஃபைனல் வாய்ப்பு..!

இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித்துக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கேப்டன்சி தடை 2020ம் ஆண்டே முடிந்துவிட்டது. எனவே நான்கரை ஆண்டுகளுக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
 

click me!