BAN vs IND: காயத்தால் களத்திலிருந்து வெளியேறி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ரோஹித் சர்மா

By karthikeyan VFirst Published Dec 7, 2022, 1:46 PM IST
Highlights

வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கை கட்டைவிரலில் காயமடைந்து களத்திலிருந்து வெளியேறிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது இந்திய அணி.

தாக்காவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷபாஸ் அகமது, குல்தீப் சென் நீக்க்ப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

ICC WTC புள்ளி பட்டியல்: பாகிஸ்தான் தோல்வியால் இந்தியாவிற்கு ஃபைனல் வாய்ப்பு..!

வங்கதேச அணி:

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

முதலில் பேட்டிங்  ஆடிவரும் வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டர் இந்திய பவுலர்களிடம் சரணடைந்தது. தொடக்க வீரர்கள் அனாமுல் ஹக் (11), லிட்டன் தாஸ் (7) ஆகிய இருவரையும் சிராஜ் வீழ்த்த, 3ம் வரிசையில் இறங்கிய நஜ்முல் ஹுசைனை (21) உம்ரான் மாலிக் வீழ்த்தினார். 

ஷகிப் அல் ஹசன் (8), முஷ்ஃபிகுர் ரஹிம் (12), அஃபிஃப் ஹுசைன்(0) ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, 69 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி பேட்டிங் ஆடிவருகிறது.

இந்த போட்டியின் 2வது ஓவரின் 5வது பந்தில் சிராஜ் பவுலிங்கில் அனாமுல் ஹக் அடித்த பந்தை ஸ்லிப்பில் நின்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கேட்ச் பிடிக்க முயன்றார். அந்த கேட்ச்சை ரோஹித் சர்மா தவறவிட்டார். அந்த கேட்ச்சை பிடிக்க முயன்றபோது அவரது கை கட்டைவிடலில் காயம் ஏற்பட்டது. கட்டைவிரலிலிருந்து ரத்தம் சொட்ட, ரோஹித் வலியால் துடித்தார். உடனடியாக அவரை பரிசோதித்தது இந்திய அணியின் மருத்துவக்குழு. பின்னர் ஸ்கேன் செய்வதற்காக ரோஹித் சர்மா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதனால் ரோஹித் சர்மா 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.  அவருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் ஃபீல்டிங் செய்துவருகிறார். ஷிகர்தவான் பொறுப்பு கேப்டனாக செயல்படுகிறார்.

2022ல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை சம்பவங்கள்

ரோஹித் கேட்ச் விட்டதற்கு அடுத்த பந்திலேயே அனாமுல் ஹக்கை சிராஜ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
 

click me!