இந்த 4 பவுலர்கள் தான் சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு பெரிய தலைவலி.! ஸ்மித் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Aug 13, 2021, 3:24 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் 4 சர்வதேச ஃபாஸ்ட் பவுலர்கள் யார் யார் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார் ஸ்டீவ் ஸ்மித். சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்துவரும் ஸ்மித், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் அனைத்து நாடுகளிலும் அபாரமாக ஆடி சதங்களை விளாசி, பெரிய ஸ்கோரை அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார். 

வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலையும், கணிக்கமுடியாத கால் நகர்வுகளையும் ஸ்மித் பெற்றிருப்பதால், பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 7000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனைக்குரியவர்.

உலகின் அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் சிறந்த பவுலர்களையெல்லாம் எதிர்கொண்டு ஆடியுள்ள ஸ்மித்திடம், சமகால கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் 4 ஃபாஸ்ட் பவுலர்கள் யார் யார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித், பும்ரா(இந்தியா), ஆண்டர்சன்(இங்கிலாந்து), ரபாடா(தென்னாப்பிரிக்கா) மற்றும் கம்மின்ஸ்(ஆஸ்திரேலியா) ஆகிய நால்வரும் தான் சமகால கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 

click me!