
பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடந்துவரும் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸும் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:
மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, பென் மானெண்டி, கேமரூன் பாய்ஸ், வெஸ் அகார், ஹென்ரி தார்ண்டான், ஹாரி கான்வே.
IND vs NZ: ஒருநாள் தொடரிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு
சிட்னி சிக்ஸர்ஸ் அணி:
ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், குர்டிஸ் பாட்டர்சன், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், ஹைடன் கெர், டேனியல் கிறிஸ்டியன், பென் துவர்ஷுயிஸ், சீன் அபாட், ஸ்டீவ் ஓ கீஃப், டாட் மர்ஃபி.
முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரராக இறங்கிய, சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அதிரடியாக பேட்டிங் ஆடிய அவர் 56 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 101 ரன்களை குவித்தார். விராட் கோலி, கேன் வில்லியம்சனுக்கு நிகரான திறமையான பேட்ஸ்மேனாக ஸ்மித் இருந்தாலும், அவர் ஒரு டி20 வீரராக மதிக்கப்படவில்லை. அதற்கு அவரது ஸ்டிரைக் ரேட்டே காரணம். அவர் அடித்து ஆடக்கூடிய வீரர் இல்லை என்பதால், நவீனகால டி20 கிரிக்கெட் வீரராக அவர் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை இருந்தது.
சச்சின் டெண்டுல்கர் 100 சத சாதனையை முறியடிக்க கோலி என்ன செய்யணும்..? கவாஸ்கர் அதிரடி ஆலோசனை
இந்நிலையில், தன்னாலும் அதிரடியாக பேட்டிங் ஆடமுடியும் என்பதை பறைசாற்றும் விதமாக அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் பவுலிங்கை அடி வெளுத்துவாங்கினார் ஸ்மித். அவரது அதிரடியான சதத்தால் 20 ஓவரீல் 203 ரன்களை குவித்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 204 ரன்கள் என்ற கடின இலக்கை அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸூக்கு நிர்ணயித்துள்ளது. ஸ்மித்தை தவிர, ஜோர்டான் சில்க் (16 பந்தில் 31 ரன்கள்) மற்றும் பாட்டர்சன்(43) ஆகிய இருவரும் பங்களிப்பு செய்தனர்.
204 ரன்கள் என்ற கடினமான இலக்கை அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி விரட்டிவருகிறது.