நியூசிலாந்தின் இந்த ஒரு அஸ்திரத்தை ரோஹித் அடித்து காலி செய்துவிட்டால் அவர் தான் மேட்ச் வின்னர்..! வெற்றி நமதே

By karthikeyan VFirst Published Oct 30, 2021, 8:33 PM IST
Highlights

 நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா, தனக்கு எதிரான நியூசிலாந்தின் ஒரேயொரு பலமான அஸ்திரத்தை கடந்துவிட்டால், ரோஹித் சர்மா தான் மேட்ச் வின்னர்; வெற்றி இந்திய அணிக்குத்தான் என்பதை புள்ளிவிவரங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை துபாயில் நடக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே அவற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றன. பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்த 2 அணிகளும், நாளைய போட்டியில் மோதுகின்றன. அதன்பின்னர் இந்த 2 அணிகளும் மோதும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிடும். எனவே நாளைய போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. நாளைய போட்டியில் ஜெயிக்கும் அணி தான் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தை பிடித்து, க்ரூப் 2-ல் இடம்பெற்றிருக்கும் அணிகளில் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகம் பெறும்.

அந்தவகையில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி இரு அணிகளுக்குமே கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. எனவே இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் தான் களமிறங்கும். இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், தொடக்க வீரர் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடியாக வேண்டும். ஏனெனில், நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ரெக்கார்டை வைத்திருக்கிறார் ரோஹித் சர்மா. ஆனால் அதற்கு ரோஹித் சர்மா, அவருக்கு எதிரான நியூசிலாந்தின் பலமான அஸ்திரத்தை அடித்து காலி செய்தாக வேண்டும். இதுதொடர்பான புள்ளிவிவரங்களை பார்ப்போம்.

இதையும் படிங்க - அவரை மல்லுக்கட்டி ஆடவைக்காதீங்க.! டீம்ல வேற ஆளா இல்ல.. வதவதனு இருக்காங்க..! இந்திய அணிக்கு சல்மான் பட் அட்வைஸ்

நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை ரோஹித் சர்மா ஆடிய 13 இன்னிங்ஸ்களில் 138 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 338 ரன்களை குவித்துள்ளார் ரோஹித். டி20 கிரிக்கெட்டில் ரோஹித் அதிகமான அரைசதங்களை நியூசிலாந்துக்கு எதிராகத்தான் அடித்திருக்கிறார்.

கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய டி20 தொடரில் 2 அரைசதங்கள் அடித்தார் ரோஹித் சர்மா. அதில் ஒரு போட்டியில் சூப்பர் ஓவரில் டிம் சௌதியை 2 சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். நியூசிலாந்துக்கு எதிராக நல்ல பேட்டிங் ரெக்கார்டை வைத்துள்ள ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிராக கண்டிப்பாக ஜொலிப்பார் என நம்பலாம். ரோஹித் ஜொலித்தால் வெற்றி இந்திய அணிக்குத்தான்.

ஆனால் அதேவேளையில், ரோஹித் சர்மாவிற்கு ஒரு பெரிய பிரச்னையும் இருக்கிறது. ரோஹித் சர்மாவிற்கு இடது கை ஃபாஸ்ட் பவுலர்கள் ஸ்டம்ப்புக்கு நேராக உள்ளே எடுத்துவரும் பந்துக்கு எதிராக பெரிய பிரச்னை இருந்துவருகிறது. அதை கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஷாஹீன் ஷா அஃப்ரிடியின் பந்தில் அவுட்டானது வரை பார்த்திருக்கிறோம். 

இதையும் படிங்க - #INDvsNZ நீ பண்ண மாயாஜாலம்லாம் போதும் கிளம்புப்பா!சீனியர் வீரரிடம் சரணாகதியடையும் இந்திய அணி! உத்தேச ஆடும் 11

ஷாஹீன் அஃப்ரிடியின் பந்தில் ரோஹித் அவுட்டானதன் மூலம், 14வது முறையாக இடது கை ஃபாஸ்ட் பவுலரின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். ரோஹித்துக்கு இடது கை ஃபாஸ்ட் பவுலரை எதிர்கொள்வதில் பிரச்னை இருக்கிறது என்பது நியூசிலாந்து அணிக்கும் நன்றாகவே தெரியும். அதனால் டிரெண்ட் போல்ட் தான் ரோஹித்துக்கு எதிரான நியூசிலாந்தின் அஸ்திரம். நியூசிலாந்தின் இடது கை ஃபாஸ்ட் பவுலரான டிரெண்ட் போல்ட்டின் பவுலிங்கை 7 இன்னிங்ஸ்களில் எதிர்கொண்டுள்ள ரோஹித் சர்மா, 29 ரன்கள் மட்டுமே அடித்து, 3 முறை ஆட்டமிழந்திருக்கிறார். 

எனவே டிரெண்ட் போல்ட்டை பவர்ப்ளேயில் ரோஹித் சர்மா சமாளித்துவிட்டால், நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடுவது உறுதி என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
 

click me!