ஆஸி.,க்கு எதிரான நீயா நானா போட்டியில் டாஸ் வென்ற இங்கி., அணியின் அதிரடி முடிவு..! ஆஸி., அணியில் ஒரு மாற்றம்

Published : Oct 30, 2021, 07:31 PM IST
ஆஸி.,க்கு எதிரான நீயா நானா போட்டியில் டாஸ் வென்ற இங்கி., அணியின் அதிரடி முடிவு..! ஆஸி., அணியில் ஒரு மாற்றம்

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் சிறப்பாக ஆடி, இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணி முதலிடத்திலும் (ரன்ரேட்டின் அடிப்படையில்), ஆஸ்திரேலிய அணி 2ம் இடத்திலும் உள்ள நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் நீயா நானா போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகிறது.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், டைமல் மில்ஸ்.

ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டர் அஷ்டன் அகார் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!