அவரை மல்லுக்கட்டி ஆடவைக்காதீங்க.! டீம்ல வேற ஆளா இல்ல.. வதவதனு இருக்காங்க..! இந்திய அணிக்கு சல்மான் பட் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Oct 30, 2021, 6:14 PM IST
Highlights

முழு ஃபிட்னெஸுடன் இல்லாத ஹர்திக் பாண்டியாவை மல்லுக்கட்டி ஆடவைக்காமல், அவருக்கு பதிலாக வேறு வீரரை ஆடவைக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து கூறியுள்ளார்.
 

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கபில் தேவுக்கு நிகராக பேசப்பட்டவர்/மதிப்பிடப்பட்டவர். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே அணியில் தனக்கென்று நிரந்தர இடத்தை பிடித்து, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தவர்.

இந்திய அணியின் முக்கியமான வீரராக ஜொலித்துக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு வினையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை  தொடர். அந்த தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.

முழு ஃபிட்னெஸுடன் இல்லாததாலேயே அவரால் பவுலிங்கும் வீசமுடியாமல் போயிற்று. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை.

டி20 உலக கோப்பையில் அவர் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில்  பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் தோள்பட்டையில் காயமடைந்த பாண்டியா, 2வது இன்னிங்ஸில் களத்திற்கே வரவில்லை.

இதையும் படிங்க - #INDvsNZ நீ பண்ண மாயாஜாலம்லாம் போதும் கிளம்புப்பா!சீனியர் வீரரிடம் சரணாகதியடையும் இந்திய அணி! உத்தேச ஆடும் 11

அவர் பந்துவீசாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் 6வது பவுலிங் ஆப்சன். ஆனால் அவர் பந்துவீசாததால் இந்திய அணி சரியாக 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் ஆடுவதால், 6வது பவுலிங் ஆப்சன் கிடையாது. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் அவர் பந்துவீசியாக வேண்டும். அப்படி வீசவில்லை என்றால் அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவது அவசியமற்றது. வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் ஹர்திக் பாண்டியாவை ஆடவைப்பது அணி காம்பினேஷனை பாதிக்கும். அந்த பாதிப்பைத்தான் பாகிஸ்தானுக்கு எதிராக அனுபவித்தது இந்தியா.

முழு ஃபிட்னெஸுடன் இல்லாத ஹர்திக் பாண்டியாவை, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வுசெய்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்தது. அதன்விளைவாக, அதற்கான விடையும் கிடைத்தது. ஐபிஎல்லில் ஒரு ஓவர் கூட பந்துவீசாத ஹர்திக் பாண்டியாவை டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்காமல், அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு அனுப்பிவிடத்தான் தேர்வாளர்கள் முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால் இந்திய அணியின் ஆலோசகர் தோனி தான், ஹர்திக் பாண்டியா ஒரு ஃபினிஷராக இந்திய அணிக்குத் தேவை என்று அணியில் எடுக்க  சொல்லியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி நாளை ஆடவுள்ள நிலையில், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டபோது ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். எனவே நியூசிலாந்துக்கு எதிராக கண்டிப்பாக ஒருசில ஓவர்களை வீசி, தன்னை 6வது பவுலிங் ஆப்சனாக நிலைநிறுத்திக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரர் சல்மான் பட், ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியாவில் அவர் ஆடிய சில அபாரமான இன்னிங்ஸ்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் இப்போது ஃபிட்டாக இல்லை. அவர் ஃபிட்டாக இல்லாதபோது, அவர் மீது அதிக அழுத்தம் போடக்கூடாது. பிரச்னையான விஷயங்களிலேயே அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவருடைய பவுலிங் ஆக்‌ஷன் சரியில்லை என்றால், அவரது பவுலிங் அவுட்புட் சரியாக இருக்காது; அவரால் நல்ல வேகத்திலும் வீசமுடியாது. 100 சதவிகிதம் ஃபிட்டாக இல்லையென்றால், மனரீதியாகவும் அது பாதிப்பை ஏற்படுத்தும். ஹர்திக் பாண்டியா பந்துவீசுமளவிற்கு ஃபிட்டாக இல்லையென்றால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை ஆடவைக்கலாம். அஷ்வின் - ராகுல் சாஹர் ஆகிய வீரர்களும் உள்ளனர் என்று சல்மான் பட் தெரிவித்தார்.
 

click me!