அனைத்து வீரர்களும் கைவிட்ட இலங்கை அணியை தனிநபராக கரைசேர்த்த நிசாங்கா..! தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Oct 30, 2021, 5:26 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில்  பேட்டிங் ஆடிய இலங்கை அணி, நிசாங்காவின் பொறுப்பான அரைசதத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த போட்டியில் ஆடாத குயிண்டன் டி காக், நிறவெறிக்கு எதிராக மண்டியிட்டு கையை உயர்த்தி தனது குரலை பதிவு செய்ய ஒப்புக்கொண்டதையடுத்து, இந்த போட்டியில் அவர் ஆடுகிறார். அவர் அணிக்குள்  நுழைந்ததால், ஹென்ரிச் கிளாசன் நீக்கப்பட்டார்.

இதையும் படிங்க - #INDvsNZ நீ பண்ண மாயாஜாலம்லாம் போதும் கிளம்புப்பா!சீனியர் வீரரிடம் சரணாகதியடையும் இந்திய அணி! உத்தேச ஆடும் 11

தென்னாப்பிரிக்க அணி;

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர் டசன், எய்டன் மார்க்ரம், ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், ட்வைன் ப்ரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷாம்ஸி.

இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இலங்கை அணி ஆடிவருகிறது.

இலங்கை அணி:

குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரராக, டி20 உலக கோப்பையில் ஜொலித்துவரும் அசலங்காவும் 21 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, அதன்பின்னர் ராஜபக்சா(0), அவிஷ்கா ஃபெர்னாண்டோ(3), வனிந்து ஹசரங்கா(4), கேப்டன் தசுன் ஷனாகா(11), சாமிகா கருணரத்னே(5) ஆகிய அனைவரும் சொற்ப ரன்களுக்கு தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க - இவ்வளவு பெரிய தவறை செய்து இந்திய அணியை ஆபத்தில் சிக்கவைத்தது தோனியா..? வெளிவந்தது அதிர்ச்சி தகவல்

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் நிசாங்கா நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். தனிநபராக ஒருமுனையில் நங்கூரமிட்டு ஆடிய நிசாங்காவிற்கு மறுமுனையில் எந்த வீரரும் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் இலங்கை அணியின் ஸ்கோர் வேகமாக உயரவில்லை. பொறுப்புடன் ஆடிய நிசாங்கா 58 பந்தில் 72 ரன்கள் அடித்து 19வது ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 142 ரன்கள் அடித்த இலங்கை அணி, 143 ரன்கள் என்ற சவாலான இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க - பழசை மனசுல வச்சு டீம் எடுக்கக்கூடாது!உலகின் சிறந்த வீரரையே உட்கார வச்சுருக்கீங்க! செமயா விளாசிய முன்னாள் வீரர்

click me!