T20 World Cup மிக முக்கியமான போட்டியில் தென்னாப்பிரிக்கா - இலங்கை பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Oct 30, 2021, 3:33 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையேயாதான் கடும் போட்டி நிலவுகிறது. க்ரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய 3 அணிகள் தான் பெரிய அணிகள். ஆஃப்கானிஸ்தான் அணியும் டஃப் கொடுக்கும். ஆனால் ஏனைய 2 அணிகள் நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகும். அதனால் பெரிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவிலேயே எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதை க்ரூப் 2-ஐ பொறுத்தமட்டில் தீர்மானித்துவிடமுடியும்.

ஆனால் க்ரூப் 1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இலங்கை என 6 அணிகளுமே சிறந்த அணிகளாக இடம்பெற்றுள்ளன. அதனால் இந்த அணிகளுக்கு இடையேயான போட்டி மிகக்கடுமையாக இருக்கிறது. க்ரூப் 1-ல் இதுவரை ஆடிய போட்டிகளை பொறுத்தமட்டில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும், அவை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பும் உள்ளது. எனவே இந்த க்ரூப்பை பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் முடிந்தால் மட்டும்தான் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் தீர்மானமாகும். அந்தவகையில் இதுவரை தலா 2 போட்டிகளில் ஆடி தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 2 அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி இன்று ஷார்ஜாவில் நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் ஆடாத குயிண்டன் டி காக், நிறவெறிக்கு எதிராக மண்டியிட்டு கையை உயர்த்தி தனது குரலை பதிவு செய்ய ஒப்புக்கொண்டதையடுத்து, இந்த போட்டியில் அவர் ஆடுகிறார். அவர் அணிக்குள்  நுழைந்ததால், ஹென்ரிச் கிளாசன் நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்

தென்னாப்பிரிக்க அணி;

டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர் டசன், எய்டன் மார்க்ரம், ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், ட்வைன் ப்ரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷாம்ஸி.

இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இலங்கை அணி ஆடுகிறது.

இதையும் படிங்க - பழசை மனசுல வச்சு டீம் எடுக்கக்கூடாது!உலகின் சிறந்த வீரரையே உட்கார வச்சுருக்கீங்க! செமயா விளாசிய முன்னாள் வீரர்

இலங்கை அணி:

குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா.
 

click me!