முதல் முறையாக டி20ல் கால் பதிக்கும் சுப்மன் கில், ஷிவம் மாவி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

By Rsiva kumar  |  First Published Jan 3, 2023, 6:54 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.


இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: திரும்ப வந்த பும்ரா: இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்!

Tap to resize

Latest Videos

ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதைத் தொடர்ந்து புனே மைதானத்தில் 5ஆம் தேதி 2ஆவது டி20 போட்டி நடக்கிறது. 7 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது.

ரிஷப் பண்ட் குணமடைய இந்திய அணியின் பிரார்த்தனையும், வாழ்த்தும்: பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

இந்த நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் டி20 போட்டியில் இன்று அறிமுகமாகின்றனர்.

சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சாதிக்குமா இந்தியாவின் இளம் படை?

இந்திய அணி: 

இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் கூடா, அக்‌ஷர் படேல், ஹர்ஷல் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சகால்

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சரித் அசலாங்கா, பனுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிண்டு ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, மஹீத் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்சன் மதுஷங்கா.

ஹர்திக் பாண்டியாவின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா..? கேட்க நல்லாத்தான் இருக்கு.. ஆனால் நடக்குமா..?

click me!