இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: திரும்ப வந்த பும்ரா: இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்!

By Rsiva kumarFirst Published Jan 3, 2023, 4:53 PM IST
Highlights

இலங்கை அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற்றுள்ளார். 

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரிஷப் பண்ட் குணமடைய இந்திய அணியின் பிரார்த்தனையும், வாழ்த்தும்: பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதைத் தொடர்ந்து புனே மைதானத்தில் 5ஆம் தேதி 2ஆவது டி20 போட்டி நடக்கிறது. 7 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது.

சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சாதிக்குமா இந்தியாவின் இளம் படை?

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 10 ஆம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. 2ஆவது ஒரு நாள் போட்டி 12 ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடக்கிறது. 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ரா, ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் விளையாடிய போது மீண்டும் காயம் ஏற்பட அவர் ஓய்வில் இருந்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையிலும் அவர் விளையாடவில்லை. என் சி ஏ பெங்களூருவில் சிகிச்சை எடுத்து வந்த பும்ரா தற்போது முழு உடல் தகுதியோடு இருக்கிறார் என்று அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அதிரடியாக இலங்கை அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா..? கேட்க நல்லாத்தான் இருக்கு.. ஆனால் நடக்குமா..?

ஆனால், இலங்கை தொடருக்கு எதிராக இந்திய அணி அறிவிக்கப்படும் போது அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால், இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர் விளையாடுவார் என்று செய்தி வெளியானது. இப்போது அதிரடியாக அவர் இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. எது எப்படியோ பும்ரா திரும்ப வந்துட்டார். இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்.

IND vs SL:இந்த 11 பேரை இறக்கிவிடுங்க; வெற்றி நமக்குத்தான்! ஆகாஷ் சோப்ரா தேர்வுசெய்த இந்திய அணியின் ஆடும் லெவன்

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், அக்‌ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்,

click me!