BBL: 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய டாம் ரோஜர்ஸ்..! எளிய இலக்கை அடிக்க முடியாமல் மெல்பர்ன் ஸ்டார்ஸ் படுதோல்வி

Published : Jan 03, 2023, 05:13 PM IST
BBL: 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய டாம் ரோஜர்ஸ்..! எளிய இலக்கை அடிக்க முடியாமல் மெல்பர்ன் ஸ்டார்ஸ் படுதோல்வி

சுருக்கம்

பிக்பேஷ் லீக்கில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் நிர்ணயித்த 142 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் 33 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி.  

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று மெல்பர்னில் நடந்த போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி:

ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), தாமஸ் ரோஜர்ஸ், பியூ வெப்ஸ்டர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹில்டன் கார்ட்ரைட், நிக் லார்கின், காம்ப்பெல் கெல்லாவே, நேதன் குல்ட்டர்நைல், லுக் உட், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா (கேப்டன்).

உலக கோப்பையை ரோஹித், கோலியால் மட்டும் ஜெயித்து கொடுக்க முடியாது..! இளம் வீரர்களுக்கு கபில் தேவ் அட்வைஸ்

மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி:

மார்டின் கப்டில், சாம் ஹார்பர் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், ஜோனாதன் வெல்ஸ், ஹார்வி, வில் சதர்லேண்ட், அகீல் ஹுசைன், டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், முஜீபுர் ரஹ்மான்.

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியில் மார்டின் கப்டில், ஷான் மார்ஷ் மற்றும் ஹார்வி ஆகிய மூவரும் தலா 32 ரன்கள் அடித்தனர். கப்டில் 27 பந்தில் 32 ரன்களும், ஷான் மார்ஷ் 35 பந்தில் 32 ரன்களும், ஹார்வி 23 பந்தில் 32 ரன்களும் அடித்தனர். ஆரோன் ஃபின்ச் ஒரு ரன் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். ஜோனாதன் வெல்ஸ் 24 ரன்கள் அடித்தார்.

கப்டில், ஃபின்ச், ஷான் மார்ஷ் ஆகிய அதிரடி வீரர்கள் இருந்தும் கூட, டிரெண்ட் போல்ட் மற்றும் லுக் உட்டின் அபாரமான பந்துவீச்சால் மெல்பர்ன் ரெனெகேட்ஸை 20 ஓவரில் 141 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி.  மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் டிரெண்ட் போல்ட் மற்றும் லுக் உட் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

142 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி, தொடக்கம் முதலே டாம் ரோஜர்ஸிடம் விக்கெட்டுகளை இழந்தது. ஜோ கிளார்க்(0), தாமஸ் ரோஜர்ஸ்(1), பியூ வெப்ஸ்டெர் (8) ஆகிய மூவரையும் வீழ்த்திய டாம் ரோஜர்ஸ், 20 ரன்கள் அடித்த கார்ட்ரைட்டையும் வீழ்த்தினார். அதன்பின்னர்  நிக் லார்கின் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆடி 48 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களுக்கு மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி ஆல் அவுட்டானது.

ரஞ்சி தொடர்: ஜெய்தேவ் உனாத்கத்திடம் மண்டியிட்டு சரணடைந்த டெல்லி அணி..! வெறும் 133 ரன்களுக்கு ஆல் அவுட்

மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியின் டாம் ரோஜர்ஸ் 4 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். 33 ரன்கள் வித்தியாசத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!