இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் இல்லை, உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

Published : Jan 10, 2023, 01:21 PM IST
இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் இல்லை, உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.  

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டி20 போட்டியில், இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

தோனி டெக்னிக்கை பின்பற்றிய இந்திய அணி: அஜய் ஜடேஜா பாராட்டு!

இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். இலங்கை அணியைப் பொறுத்தவரையில் தில்சன் மதுஷங்கா இன்றைய போட்டியின் மூலம் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகிறார். இந்திய அணியில் இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சகால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகு டி20 போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா!

இந்தியா அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சகால் மற்றும் முகமது சிராஜ்.

இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பில்லையா?

இலங்கை அணி: பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா பெர்ணாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா(கேப்டன்), வணிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துனித் வெல்லாலேஜ், கசுன் ரஞ்சித், தில்சன் மதுஷங்கா.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!