டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகு டி20 போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா!

By Rsiva kumarFirst Published Jan 10, 2023, 10:47 AM IST
Highlights

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகு டி20 போட்டியில் அவர் விளையாடவில்லை.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கவனிக்க வேண்டிய 7 முக்கியமான வீரர்கள்!

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1-2 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இழந்த நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2ஆவது ஒரு நாள் போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. தற்போது நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

ரிஸ்வான், பாபர் அசாம், ஃபகர் ஜமான் அபார அரைசதங்கள்..! முதல் ODI-யில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

கடந்தாண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தான் ரோகித் சர்மாவுக்கு கடைசி டி20 போட்டியாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு போதுமானதாக இல்லை என்றும், அவர் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ரோகித் சர்மா தெளிவாக விளக்கியுள்ளார்.

2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அந்த சீனியர் வீரரை கண்டிப்பா எடுக்கணும்..! ஜடேஜா அதிரடி

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வில்லாமல் விளையாடுவது என்பது சாத்தியமற்றது. கண்டிப்பாக ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். அதில் நானும் நிச்சயமாக விழுவேன். இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இந்தியா வருகிறது. இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. இதையடுத்து ஐபிஎல் ஆரம்பமாகிறது. எனினும், நான் டி20, ஒரு நாள், டெஸ்ட் போட்டி என்று எதையும் கைவிட முடிவு செய்ததில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இஷான் கிஷானுக்குப் பதிலாக சுப்மன் கில் விளையாடுவார்: ரோகித் சர்மா

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் என்னுடன் இணைந்து தொடர்க்க வீரராக சுப்மன் கில் களமிறங்குவார். இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடவில்லை. மாறாக வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 210 ரன்கள் குவித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படாது. சுப்மன் கில்லுக்கு தான் இந்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று ரோகித் சர்மா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!