ரிஸ்வான், பாபர் அசாம், ஃபகர் ஜமான் அபார அரைசதங்கள்..! முதல் ODI-யில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

By karthikeyan VFirst Published Jan 9, 2023, 11:07 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 256 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஃபகர் ஜமான் ஆகிய வீரர்கள் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்ததால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
 

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஹாரிஸ் சொஹைல், அகா சல்மான், முகமது நவாஸ், உஸாமா மிர், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப்.

2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அந்த சீனியர் வீரரை கண்டிப்பா எடுக்கணும்..! ஜடேஜா அதிரடி

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், ஹென்ரி ஷிப்லி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர டெவான் கான்வே ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலன் 29 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கேன் வில்லியம்சன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், டாம் லேதம், பிரேஸ்வெல் ஆகிய வீரர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் அவர்கள் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டனர். டேரைல் மிட்செல் 36 ரன்களும், டாம் லேதம் 42 ரன்களும், க்ளென் ஃபிலிப்ஸ் 37 ரன்களும், பிரேஸ்வெல் 43 ரன்களும் அடிக்க, 50 ஓவரில் 255 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.

256 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஜமான் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த கேப்டன் பாபர் அசாமும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஃபகர் ஜமான் 56 ரன்களும், பாபர் அசாம் 66 ரன்களும் அடித்தனர்.

என் கிரிக்கெட் கெரியரில் என்னை அச்சுறுத்திய 2பவுலர்கள் இவங்கதான்; ஒருவர் இந்தியர்! ஃபாஃப் டுப்ளெசிஸ் ஓபன் டாக்

அதன்பின்னர் முகமது ரிஸ்வான் வழக்கம்போலவே நன்றாக பேட்டிங் ஆடி அவரும் அரைசதம் அடித்தார். 77 ரன்கள் அடித்த முகமது ரிஸ்வான் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். இதற்கிடையே ஹாரிஸ் சொஹைல் அதிரடியாக ஆடி 23 பந்தில் 32 ரன்கள் அடித்து இன்னிங்ஸை துரிதப்படுத்தினார். 49வது ஓவரில் இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
 

click me!