IND vs SL: முதல் டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jan 02, 2023, 10:35 PM IST
IND vs SL: முதல் டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இலங்கை அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது.

முதல் டி20 போட்டி நாளை (ஜனவரி3) மும்பை வான்கடேவில் நடக்கிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சீனியர் வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் ஆடவில்லை. 

அக்தரின் அதிவேக பந்து சாதனையை முறியடிப்பீர்களா..? உம்ரான் மாலிக்கின் பதில்

நாளை நடக்கும் முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இலங்கை அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகிய இருவரும் இறங்குவார்கள். 3ம் வரிசையில் பானுகா ராஜபக்சா ஆடுவார்.

மிடில் ஆர்டரில் தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, கேப்டன் தசுன் ஷனாகா ஆகியோர் ஆடுவர். ஸ்பின்னர்கள் வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா. ஃபாஸ்ட் பவுலர்கள் லஹிரு குமாரா, சாமிகா கருணரத்னே, பிரமோத் மதுஷன். இவர்களுடன் கேப்டன் தசுன் ஷனாகாவும் மிதவேகப்பந்து வீசுவார். தனஞ்செயா டி சில்வாவும் ஸ்பின் ஆப்சனாக இருப்பார்.

2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு இடமில்லை..?

உத்தேச இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா, பிரமோத் மதுஷன். 
 

PREV
click me!

Recommended Stories

சுப்மன் கில்லை உடனே தூக்குங்க! கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு!
IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!