#SLvsSA தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இலங்கை அணி அறிவிப்பு

Published : Aug 30, 2021, 09:04 PM IST
#SLvsSA தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இலங்கை அணி  அறிவிப்பு

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களுக்கான 22 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கிறது.

முதல் ஒருநாள் தொடரும் அதைத்தொடர்ந்து அடுத்ததாக டி20 போட்டிகளும் நடக்கவுள்ள நிலையில், அந்த தொடருக்கான, தசுன் ஷனாகா தலைமையிலான 22 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி:

தசுன் ஷனாகா(கேப்டன்), தனஞ்செயா டி சில்வா, குசால் பெரேரால், தினேஷ் சண்டிமால், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சா, பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, வஹிந்து ஹசரங்கா, காமிந்து மெண்டிஸ், மினோத் பானுகா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே, நுவான் பிரதீப், பினுரா ஃபெர்னாண்டொ, துஷ்மந்தா சமீரா, அகிலா தனஞ்செயா, பிரவீன் ஜெயவிக்ரமா, லஹிரு குமாரா, லஹிரு மதுஷாங்கா, புலினா தரங்கா, மஹேஷ் தீக்‌ஷனா.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!