சச்சின் சிட்னி டெஸ்ட்டில் என்ன பண்ணாரோ, அதை மட்டும் பண்ணுங்க விராட்..! கோலிக்கு இங்கி., முன்னாள் வீரர் கூறும்

By karthikeyan VFirst Published Aug 30, 2021, 6:46 PM IST
Highlights

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவரும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் ஸ்கோர் செய்யமுடியாமல் சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனின் பந்தில் கோல்டன் டக் அவுட்டான கோலி, 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 20 ரன்களும் அடித்தார். 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் மீண்டும் ஆண்டர்சனின் பந்தில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2வது இன்னிங்ஸில் 55 ரன்கள் அடித்தார்.

2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்தாலும், அவரது முழு பணியை அந்த இன்னிங்ஸில் செய்து கொடுக்கவில்லை. மிகப்பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், அதிலும் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் அனைத்து இன்னிங்ஸ்களிலுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் ஆட்டமிழந்தார். கவர் ஷாட் ஆடமுயன்று விக்கெட்டின் பின்பக்கத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

விராட் கோலி இந்த தொடரில் அனைத்து இன்னிங்ஸ்களிலுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் ஆட்டமிழந்திருக்கிறார். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்துகளை விரட்டிச்சென்று கவர் டிரைவ் ஆடமுயன்றுதான் அவரது விக்கெட்டை பறிகொடுத்தார். 

இந்நிலையில், விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் 2004ல் சிட்னியில் நடந்த இன்னிங்ஸில் ஆடியதை போல, கவர் டிரைவ்களை தவிர்த்து ஆட வேண்டும் என்று மாண்டி பனேசர் அறிவுரை கூறியுள்ளார்.

2003-2004 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவ் ஆடி தொடர்ந்து அவுட்டாகி கொண்டிருந்த நிலையில், சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட்டில் கவர் டிரைவ் ஆடுவதை முற்றிலுமாக தவிர்த்தார். சதமடிக்கும் வரை கவர் டிரைவே ஆடவில்லை. தான் செய்யும் தவறை உணர்ந்து அதை திருத்தியதால் தான், அந்த குறிப்பிட்ட போட்டியில் இரட்டை சதமடித்தார். அந்த போட்டியில் 241 ரன்களை குவித்தார் சச்சின் டெண்டுல்கர். அதுமாதிரியான பேட்டிங்கை கோலி ஆடவேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!