#ENGvsIND 4வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவது உறுதி..! சீனியர் வீரருக்கு ஆப்பு

Published : Aug 30, 2021, 06:37 PM IST
#ENGvsIND 4வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவது உறுதி..! சீனியர் வீரருக்கு ஆப்பு

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுவதற்கான காலம் கனிந்து வந்துள்ளது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. 4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

கடைசி 2 டெஸ்ட் போட்டிகள், தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. 

இந்திய அணி 4வது டெஸ்ட்டில் ஒரு சில மாற்றங்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மாவின் பவுலிங் பெரிதாக எடுபடவில்லை. 3வது டெஸ்ட்டில் அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை இஷாந்த் சர்மா. 

மேலும் அந்த போட்டியில் இஷாந்த் சர்மாவின் ரன்னப், அவர் சரியான ரிதமில் இல்லை என்பதை காட்டியது. எனவே அடுத்த போட்டியில் அவர் ஆட வாய்ப்பில்லை. அதுமட்டுமல்லாது, முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னராக களமிறங்கி ஆடிய ரவீந்திர ஜடேஜாவின் முழங்காலில்  காயம் ஏற்பட்டுள்ளது. எனவே 4வது டெஸ்ட்டில் அவரும் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

எனவே 4வது டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. அதனால் வரும் 4ம் தேதி லண்டன் ஓவலில் நடக்கும் 4வது டெஸ்ட்டில் அவர் கண்டிப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

விராட் கோலி vs ரோஹித் சர்மா: இந்தூர் ஒருநாள் போட்டியின் கிங் யார்?
350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!