#CPL டிம் சேஃபெர்ட்டின் காட்டடி பேட்டிங் வீண்; வஹாப் ரியாஸ் செம பவுலிங்! போராடி தோற்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்

By karthikeyan VFirst Published Aug 30, 2021, 3:56 PM IST
Highlights

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின்  மிகவும் பரபரப்பான போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியிடம் 5 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.
 

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவரில் 157 ரன்கள் அடித்து. டிம் டேவிட் 32 பந்தில் 43 ரன்கள் அடித்து சிறப்பாக ஃபினிஷ் செய்து கொடுத்ததால் கிங்ஸ் அணி 157 ரன்களை எட்டியது.

158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் லெண்டல் சிம்மன்ஸ் 30 பந்தில் 25 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான வெப்ஸ்டர் 17 பந்தில் 18 ரன்கள் அடித்தார். அவர்கள் இருவருமே அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்காததால் ரன் வேகம் மெதுவாகவே இருந்தது.

கேப்டன் பொல்லார்டு 11 பந்தில் 9 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். காலின் முன்ரோ மந்தமாக ஆடி 46 பந்தில் 40 ரன்கள் அடித்தார். நைட் ரைடர்ஸ் அணியில் அனைத்து வீரர்களுமே மந்தமாக பேட்டிங் ஆட, டிம் சேஃபெர்ட் மட்டும் அடித்து ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார் டிம் சேஃபெர்ட்.

கடைசி 2 ஓவரில் நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார் டிம் சேஃபெர்ட். அதனால் அந்த ஓவரில் 21 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை வஹாப் ரியாஸ் அருமையாக வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸை கட்டுப்படுத்தினார்.

இதையடுத்து பரபரப்பான இந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி.
 

click me!