#ENGvsIND இங்கிலாந்து அணி இந்த 2 மாற்றங்களை செய்யணும்..! ஷேன் வார்ன் அட்வைஸ்

Published : Aug 29, 2021, 10:35 PM IST
#ENGvsIND இங்கிலாந்து அணி இந்த 2 மாற்றங்களை செய்யணும்..! ஷேன் வார்ன் அட்வைஸ்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஷேன் வார்ன் பரிந்துரைத்துள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. எனவே தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்தே பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஷேன் வார்ன் இங்கிலாந்து அணியின்  ஆடும் லெவன் குறித்து பேசியுள்ளார்.

இங்கிலாந்து அணி சாம் கரனை நீக்கிவிட்டு, ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் அல்லது ஜேக் லீச் - பார்கின்சன் ஆகிய 2 ஸ்பின்னர்களில் ஒருவரை சேர்க்க வேண்டும்.  3ம் வரிசையில் டேவிட் மலான் நன்றாக ஆடுகிறார். ஆனால் ஜாக் க்ராவ்லியும் மிகத்திறமையான வீரர். அவரை அணியில் சேர்த்து ஓபனிங்கில் இறக்கலாம் என்று ஷேன் வார்ன் கருத்து கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Vijay Shankar Retirement: கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன விஜய் சங்கர்!திடீர் முடிவுக்கான பின்னணி!
Sai Sudharsan: சிஎஸ்கேவை கதற விட்ட தமிழன்! விராட் கோலி சாதனையை சமன் செய்த சாய் சுதர்சன்!