#ENGvsIND 4வது டெஸ்ட்டில் இந்திய அணி இந்த காம்பினேஷனுடன் தான் ஆடணும்..! மைக்கேல் வான் தரமான ஆலோசனை

By karthikeyan VFirst Published Aug 29, 2021, 10:31 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இந்திய அணி கண்டிப்பாக அஷ்வினை ஆடவைக்க வேண்டும் என்று மைக்கேல் வான் ஆலோசனை கூறியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. எனவே தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால் அணி காம்பினேஷனை மாற்ற வேண்டும். இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் இதுவரை ஆடியது. 4 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஒருவர் ஸ்பின் ஆல்ரவுண்டர்(ஜடேஜா). 

இஷாந்த் சர்மா சரியாக ஆடுவதில்லை. எனவே ஒரு பவுலரை நீக்கிவிட்டு கூடுதல் பேட்ஸ்மேனுடன் ஆட வேண்டும். அஷ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என்பது முன்னாள் வீரர்கள் பலரது அட்வைஸ்.

அந்தவகையில், இந்திய அணி காம்பினேஷன் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், அடுத்த டெஸ்ட்டில் கண்டிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடவேண்டும். லார்ட்ஸ் டெஸ்ட்டை வைத்து இந்திய அணி தப்பு கணக்கு போட்டு 3வது டெஸ்ட்டில் அஷ்வினை ஆடவைக்கவில்லை. ஆனால் 8ம் வரிசை வீரராகவே ஷமி இறங்குவது சரியானது அல்ல. 4 ஃபாஸ்ட் பவுலர்கள் தேவையில்லை என்று மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!