#IPL2021 வாஷிங்டன் சுந்தர் நீக்கம்.. மாற்று வீரரை அறிவித்தது ஆர்சிபி

Published : Aug 30, 2021, 02:56 PM IST
#IPL2021 வாஷிங்டன் சுந்தர் நீக்கம்.. மாற்று வீரரை அறிவித்தது ஆர்சிபி

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து ஆர்சிபி அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசன் முதல் பாதியில் ஆர்சிபி அணி சிறப்பாக ஆடியது. 7 லீக் போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த நிலையில், 14வது சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன. அதற்காக ஐபிஎல் அணிகள் அமீரகம் சென்று கொண்டிருக்கின்றன. அனைத்து அணிகளும்  ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் கை விரல் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தருக்கு பயிற்சி போட்டியின் போது கை விரலில் காயம் ஏற்பட்டது. எனவே இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய சுந்தர், இன்னும் காயத்திலிருந்து மீளாததால், ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக பெங்காலை சேர்ந்த மிதவேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் ஆர்சிபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 24 வயதான பெங்காலை சேர்ந்த ஆகாஷ் தீப், டி20 கிரிக்கெட்டில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!
கேமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு ஏலம்.. ஆனால் கைக்கு ரூ.18 கோடி தான் கிடைக்கும்.. ஏன் தெரியுமா?