#ENGvsIND சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..! எதார்த்தத்தை கூறிய முன்னாள் வீரர்

Published : Aug 30, 2021, 08:56 PM IST
#ENGvsIND சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..! எதார்த்தத்தை கூறிய முன்னாள் வீரர்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவை சேர்க்க இந்திய அணியில் இடம் இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமனில் உள்ளது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் போட்டிகள் என்பதால், இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித்தும் ராகுலும் நன்றாக ஆடிவருகின்றனர். ஆனால் புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவரும் ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவருவது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. 

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக சூர்யகுமார் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால் சூர்யகுமார் யாதவை சேர்த்தால் யாரையும் நீக்கமுடியாது.

சூர்யகுமார் யாதவை சேர்ப்பது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, சூர்யகுமார் யாதவை இந்திய அணியில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் சிறந்த வீரர். ஆனால் அவர் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அவரை சேர்க்க இடமில்லை. ரோஹித், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரையுமே நீக்கமுடியாது. எனவே சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!